tamilnadu

img

சிம்லா ராகிங் கொடுமையால் தலித் மாணவி மரணம் சிபிஎம் போராட்டம்

சிம்லா ராகிங் கொடுமையால் தலித் மாணவி மரணம் சிபிஎம் போராட்டம்

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா  மாவட்டத்தில் உள்ள தர்மசாலா கல்லூரியில் பயின்று வந்த 19  வயது தலித் மாணவி (பல்லவி) பேராசி ரியர் மற்றும் சீனியர் மாணவிகளின் துன்பு றுத்தலால் (ராகிங்) மன உளைச்சல் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீ ரென டிசம்பர் 26ஆம் தேதி சிகிச்சை பல னின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படு கிறது. மன உளைச்சல் சிகிச்சை பெற்று  வந்த மாணவி எப்படி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்? என நாடு முழுவதும் கேள்விகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக  மாணவி டிச. 26ஆம் தேதி உயிரிழந்தா லும், இறப்பதற்கு முன்பு அவர் வெளி யிட்டுள்ள வீடியோ சனியன்று வெளியாகி யதன் மூலமே இந்த விவகாரம் வெளிச்  சத்திற்கு வந்துள்ளது. வீடியோவில்,”புவியியல் துறை உத விப் பேராசிரியர் அசோக் குமார் என்னை தொடர்ந்து பாலியல் ரீதியாகவும் மன ரீதியாவும் துன்புறுத்தினார். ஹர்ஷிதா, ஆக்ரிதி, கோமோலிகா ஆகிய மூன்று சீனியர் மாணவிகள் என்னை ராக்கிங் செய்து கொடூரமாக தாக்கினர். இது பற்றி வெளியே சொன்னால் விளைவுகள்  மோசமாக இருக்கும் என மிரட்டினர்” என கண்ணீர் மல்க கூறினார். மாணவி யின் தந்தை அளித்த புகாரின் அடிப்படை யிலும், மாணவி பேசிய வீடியோவின் அடிப்படையிலும் காவல்துறை வழக்குப்  பதிந்து விசாரித்து வருகிறது. உதவிப் பேராசிரியர் அசோக் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில், மாணவி பல்லவியின்  மரணத்திற்கு முறையான விசாரணை நடத்தக் கோரியும், குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சிம்லா நகர குழு சார்பில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு சனியன்று போரா ட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது காவல்துறை யின் மெத்தனப் போக்கிற்கும், அர சாங்கத்தின் தோல்விக்கும் எதிராக ஆவேசமான முழக்கங்கள் எழுப்பப்பட் டன. சிபிஎம் மாநிலச் செயலாளர் சஞ்சய்  சவுகான், மாநிலச் செயற்குழு உறுப்பி னர் ராகேஷ் சின்ஹா, மாநிலக் குழு  உறுப்பினர் ஜகத் ராம் ஆகியோர் போராட்  டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.