ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப்பெற முடியாது; நேட்டோவிலும் உக்ரைனுக்கு இடமில்லை!
டிரம்ப் கைவிரிப்பு
வாசிங்டன், ஆக. 18 - ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெற இயலாது, அதேபோல நேட்டோவிலும் உக்ரைனை சேர்த்துக் கொள்ள முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கைவிரித்துள்ளார். உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த வாரம் ரஷ்ய ஜனா திபதி புடினுடன், டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியையும் திங்கட்கிழமை யன்று டிரம்ப் சந்திப்பார் என்று தெரி விக்கப்பட்டது. இந்நிலையில் சந்திப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே, டிரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், “நேட்டோவில் உக்ரைனை உறுப்பின ராக்க வேண்டும், கிரிமியாவை ரஷ்யா விடம் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்ற கனவுகளை ஜெலன்ஸ்கி கைவிட்டு விட்டால் போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியமாகும்” என்று கூறி ஜெலன்ஸ்கிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். “உக்ரைன் ஜனாதிபதி ஜெல ன்ஸ்கி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லை, போரை தொடர்ந்து நடத்த அவர் விரும்பி னால், அவர் போரிடலாம். இந்தப் போர் எப்படி தொடங்கியது என்பதை நினைத்துப் பாருங்கள். நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கக் கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. அதேபோல் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிமியா ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டது. அதை மாற்றமுடியும் என்று உக்ரைன் நினைக்கக் கூடாது” என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை உசுப்பேற்றி சண்டையிட வைத்த அமெரிக்கா, தற்போது உக்ரைனை நட்டாற்றில் விட்டுள்ளது. அமெரி க்காவை நம்பி, ரஷ்யாவைப் பகைத்துக் கொண்ட உக்ரைனுக்கு அனைத்து வகை யிலும் இழப்பு மட்டுமே மிச்சமாகியுள்ளது.