tamilnadu

img

வாயு கசிவு: பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

சென்னை, நவ. 5- திருவொற்றியூரில் வாயு க்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளி திங்களன்று மீண்டும் திறந்த போது 8 மாணவர்கள் மயக்கமடைந்ததை ஒட்டி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் கிராமத் தெருவில் உள்ள  விக்டோரியா மெட்ரிகுலே ஷன் என்ற தனியார் பள்ளி யில் கடந்த 25ஆம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு 35க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இருமல், தொண்டை எரிச் சல், வாந்தி போன்ற உபா தைகள் ஏற்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்ற னர். இதையடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை விடப் பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் பள்ளி திங்களன்று (நவ. 4) திறக்கப்பட்டது. மாணவர் கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவர் ்களின் பெற்றோர்கள் பள்ளியை  முற்றுகையிட்டு, என்ன காரணத்தினால் வாயு கசிவு ஏற்பட்டது, என்ன நடவடிக்கை எடுக்க ப்பட்டது என கேள்வி எழுப்பினர். இதற்கிடையே மீண்டும் 8 மாணவர்கள் மயக்கமடைந்தனர். இது அந்த பகுதி முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் ஏராளமான பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல பள்ளி க்கு வந்தனர். பெற்றோர் கள் முகத்திலும், மாணவர் கள் முகத்திலும் அச்சத்தை  காண முடிந்தது.  மயக்க மடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப் பட்டனர். சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல மாநக ராட்சி துணை ஆணையர்  ரவி கட்டா தேஜா, வட்டாட் சியர் சகாய ராணி ஆகி யோர் பள்ளிக்குச் சென்று நிலைமைகளை கேட்டறிந் தனர். பெற்றோர்கள் காலை முதலே பள்ளியை முற்று கையிட்டதால் அந்த இடமே பதற்றமாக காணப்பட்டது.

வாயு கசிவிற்கு தீர்வு கண்ட பிறகே  பள்ளியை திறக்க வேண்டும்: சிபிஎம்

சென்னை, நவ. 5- திருவொற்றியூர் தனியார் பள்ளியில் எப்படி வாயு கசிவு ஏற்பட்டது என்பதை முழு மையாக கண்டறிந்து அதற்கு தீர்வு காணப் பட்ட பிறகே பள்ளியை திறக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட குழு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடசென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டோரியா மெட்ரிகுலேஷன் என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்கி வரு கிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்ற னர். இந்நிலையில் அந்த பள்ளியில் கடந்த 25ஆம் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்ட தில் 39 மாணவர்கள் மயக்கமடைந்தனர். சிலருக்கு வாந்தி மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர். இது தொடர்பாக திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். அமோனியா வாயு கசிந்துள்ளதா என்பதை அறிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாசுக் கட்டுப் பாடு வாரிய பொறியாளர்களும், மாநக ராட்சி அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால் ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்பட வில்லை. இந்நிலையில் வாயு கசிவு காரணமாக மூடப்பட்ட அந்த பள்ளி 10 நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை (நவ. 4) திறக்கப்பட்ட நிலை யில், மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 8க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்க மடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் மருத்து வமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அந்த பள்ளியில் மீண்டும் வாயு கசிவு  ஏற்பட்டு மாணவர்கள் மீண்டும் மயக்க மடைந்ததால் பெற்றோர்களும், மாணவர் களும் அச்சமடைந்துள்ளனர் ஆய்வு முடி வுகள் முழுமையாக வெளிவராத சூழலில் பள்ளியை திறக்க முற்பட்டது ஏன்? வாயு கசிவுக்கான காரணம் என்ன என்பதை முழு மையாக கண்டறிந்து அதற்கு தீர்வு காண ப்பட்ட பிறகே பள்ளியை திறக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.