வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், வியாழனன்று மாலை தலைமை தபால் நிலையம் முன்பு கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், சி. விஜயகாந்த், ஜி.வெண்ணிலா, கே.பி.மார்க்ஸ், ஏ. அமுல் காஸ்ட்ரோ, டி.ஜி. ரவிச்சந்திரன், மயிலாடுதுறை நகர செயலாளர் டி. துரைக்கண்ணு, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.கேசவன், சீர்காழி ஒன்றிய செயலாளர் எஸ். ஞானபிரகாசம், குத்தாலம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ராமகுரு ஆகியோர் உரையாற்றினர். மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருச்சி இஸ்லாமியர்களை துன்புறுத்தும் வகையிலும், இஸ்லாமியர்களுக்கும் பிற மதத்தினருக்கும் உள்ள சகோதரத்துவத்தை சீர் குலைக்கும் வகையிலும், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், வகுப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில், வியாழனன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக் குழு உறுப்பினர் எம். ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கணேசன், தெய்வநீதி, நித்யா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், குருநாதன், மணிமாறன், எம்.ஜி.குமார், பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சை மாநகரம், தஞ்சை ஒன்றியம் சார்பில், தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையம் அருகே நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்திற்கு சி.பி.எம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், கோ.நீலமேகம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். குருசாமி, இ.வசந்தி, சி.சரிதா, கு.சந்துரு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன், உலமாக்கள் மவ்லவி எம்.ஹாஜா முகைதீன், மக்கா பள்ளி தலைவர் ஏ.ஜாகிர் உசேன், ரகுமானியா பள்ளி எஸ்.அபுசாலி, வல்லம் சேக் அகமது ரபீக், எம்.முகமது ரபீக், திருக்கானூர்பட்டி அப்துல் காதர் மற்றும் மாநகரக் குழு, ஒன்றியக் குழுத் தோழர்கள், தோழமை கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர். சேதுபாவாசத்திரம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார் தலைமை வகித்தார். சிஐடியு மீனவர் அணி மாவட்ட துணைத்தலைவர் வி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா, மீனவர் நல வாரிய துணைத்தலைவர் ஏ.தாஜுதீன் மற்றும் கே.குத்புதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பெரியண்ணன், ஏ.இளங்கோ, பி.நவநீதம், எம்.மகேஸ்வரி, வி.நாகேந்திரன், ஆர்.மகாலிங்கம், ஏ.மேனகா, வி.நவநேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பில், தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏ.அமானுல்லா, மனிதநேய ஜனநாயகக் கட்சி ஏ.அதிரை ஷேக் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் கவிஞர் களப்பிரன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் எம். அப்துல் சுக்கூர், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ஏ.ஷேக் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டப் பொருளாளர் ஹெச்.ஜெகபர் அலி, பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய முன்னேற்ற நலச் சங்கம் எம்.அப்துல் ஜபார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் ஒன்றியக் குழு தோழர்கள் கு.பெஞ்சமின், முருக.சரவணன், ஆர். ஞானசூரியன், ஆர். ஜீவானந்தம், மோரிஸ். அண்ணாதுரை, டி.சரோஜா, கே.பாலசுப்பிரமணியன், எம்.சாமிநாதன், எஸ். சுந்தரபாண்டியன், ஏ.மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் கட்சியின் ஒன்றிய செயலாளர் பக்ருதீன் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள், அனைத்து ஜமாத் பொறுப்பாளர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி,சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஏனாதி ராசு, திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஆசைத்தம்பி,தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் அபுபக்கர் சித்திக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுடர் வளவன், மலை.தேவேந்திரன், இந்திராநகர், புதுவளவு, திருக்களம்பூர் உள்ளிட்ட ஊர்களின் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்று இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் வஃக்பு வாரிய திருத்தச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.