நெல்லையில் சிபிஎம் நில உரிமை மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாட்டையொட்டி திருநெல்வேலி மாவட்டக்குழு சார்பில், செவ்வாயன்று நில உரிமை மாநாடு நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன் தலைமையிலான இந்த மாநாட்டில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, விஜூகிருஷ்ணன், ஆர். கருமலையான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், மாநிலக்குழு உறுப்பினர் பி.கற்பகம் உள்ளிட்டோர் பேசினர்.