சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி
லஞ்சம் ஊழலை தடுக்க வேண்டிய அமலாக்கத்துறையே, ஊழல்வாதிகள் என்பதை இப்போது வெளியாகும் சாட்சியங்கள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. இது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா
நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையில் அரசியல் செய்யக் கூடாது என்று கூறுவோருக்கு (பாஜகவினர்) ஒரே ஒரு கேள்வி. மோடியின் புகைப்படம் “ஆபரேசன் சிந்தூர்” போஸ்டர்களிலும், ரயில் பயணச் சீட்டுகளிலும், ராணுவ வீரர் போன்ற தோற்றத்தில் பிளக்ஸ் பேனர்கள் இடம்பெறுகிறது. இது அரசியல் இல்லையா?
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சாகேத் கோகலே
இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் மோடி அரசு அமெரிக்காவை ஈடுபட வைக்கவில்லையெனில், அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் எப்படி நம் அரசாங்கத்துக்கு முன்பாகவே மத்தியஸ்த பேச்சுவார்த்தை குறித்து டுவீட் செய்தார்? ஏன் மோடி அரசு நாடாளுமன்றத்திலும், மக்களிடமும் பொய் சொல்கிறது?
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி
ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய பகுதிகள் அனைத்தையும், போரால் பாதிக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதனால் அவர்களின் மறுவாழ்வுப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.