tamilnadu

img

அன்னவாசலில் சிபிஎம் நிதி வசூல் இயக்கம்: மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்பு

அன்னவாசலில் சிபிஎம் நிதி வசூல் இயக்கம்: மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்பு

புதுக்கோட்டை, ஜன.4 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெகுஜன வசூல் இயக்கத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற் றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டக் குழு சார்பில், கடந்த டிச.20 ஆம் தேதி முதல் பொதுமக்களிடம் வீடு  வீடாகச் சென்று கட்சி வளர்ச்சி நிதி வசூல் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி யில் கட்சியின் மாவட்டக் குழு, இடைக்கமிட்டி  உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். மேலும், அந்தந்தப்  பகுதி மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் தகவல் சேகரிக்கப்படுகிறது. பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்த போராட்டத்திற்கும் திட்டமிடப்படுகிறது. இந்த வெகுஜன வசூல் இயக்கத்தை உற்சாகப்படுத்தும் விதமாக, புதுக்கோட்டை  மாவட்டம் அன்னவாசலில் ஞாயிற்றுக் கிழமை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் பொதுமக்களிடம் வசூல் செய்தார். இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம்,  மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆர். சுப்பையா, ஒன்றியச் செயலாளர் டி. ரகுபதி,  நகரச் செயலாளர் பொ. ஜெயபால், ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் எம்.ஜோஷி, ஆர்.சி.  ரெங்கசாமி, ஆறுமுகம், எஸ்.நாகராஜ்,  மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மு.வாசு தேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.