tamilnadu

img

தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆவேசம்

தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆவேசம்

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக!

அரசியலமைப்புச் சட்டத்திற்கு  எதிராகவும், இந்து - முஸ்லிம் சகோ தரத்துவத்தை சீர்குலைக்கும் வகையிலும் கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை, ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்  பெற வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில்  வியாழனன்று (ஏப்.17)  மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக் கான மையங்களில் தொடர் முழக் கப் போராட்டம் நடைபெற்றது.

வடசென்னை

வடசென்னை மாவட்டத்தில் 11 மையங்களில் தொடர் முழக்கம் நடை பெற்றது.  பெரம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில், கட்சி யின் மூத்த தலைவரும், அகில  இந்திய கட்டுப்பாட்டுக் குழுத்தலை வருமான ஜி. ராமகிருஷ்ணன் கண் டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் அ. விஜய குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்  டனர். அம்பத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. பத்மநாபன் கலந்து கொண்டார்.  

மத்திய சென்னை

மத்திய சென்னை மாவட்டம் சார்  பில் புரசைவாக்கத்தில் நடைபெற்ற தொடர் முழக்கத்தில் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, ஆய்வு மாணவர் அகமது நதீம், எழும்பூர் பகுதிச் செயலாளர் வே. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென்சென்னை

தென்சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையில் மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் தலைமை யில் நடைபெற்ற தொடர் முழக்கத்  தில், கட்சியின் மாநிலச் செயலாளர்  பெ. சண்முகம் வக்பு திருத்தச் சட்  டத்தைக் கண்டித்து உரையாற்றி னார். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே. வனஜகுமாரி, வே. ராஜசேகரன்,  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்  குழுவின் மாநிலச் செயலாளர் க. பீம்ராவ், மனிதநேய மக்கள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பிஸ் மில்லாகான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் அபுபக்கர், சிபிஎம் சைதை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன் உள் ளிட்டோர் பேசினர்.