tamilnadu

img

சிபிஎம் தோழர்கள் படத்திறப்பு நிகழ்வு

மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை சம்பக்குளம், கரும்பாலை பகுதி கிளைச்செயலாளர்களாக பொறுப்பு வகித்து மறைந்த தோழர்கள் சாத்தன் (எ)அய்யாவு-பாண்டி படத்திறப்பு விழா மதுரையில் ஞாயிறன்று நடைபெற்றது. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் படங்களை திறந்து வைத்தார். மறைந்த தோழர்களின் குடும்பத்தினர்-உறவினர் மற்றும் மூத்த தோழர் கருப்பன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், பகுதிக்குழு செயலாளர் டி.குமரவேல், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. ராதா, அ.ரமேஷ், எம்.பாலசுப்பிரமணியம் மற்றும் ஆர்.வாசுதேவன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முனிச்சாலை பகுதிகுழு செயலாளர் ஜெ.லெனின், ப்ரீதா ஹோமியோ மருத்துவர் தே.செங்குட்டுவன், சீனிவாசன், தங்கவேலு, ஜெயராம், ராஜேந்திரன், கணேசன்,எஸ்.எம்.லூர்து ஆகியோர் கலந்து கொண்டனர்.