மே 20 வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க சிபிஎம் அழைப்பு
இராஜபாளையத்தில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்
இராஜபாளையம், மே 9 - “ஒன்றிய அரசு தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றி, அவற்றை அமலாக்க மாநில அரசுகளை கட்டாயப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற மே 20 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதர வளிக்க வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி அழைப்பு விடுத்தார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளை யத்தில் சிபிஎம் சார்பில் புதன்கிழமை நடை பெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத் தில் அவர் பேசினார். பொன்விழா மைதானத் தில் நடந்த இந்நிகழ்வில் அரசியல் தலைமை க்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனும் சிறப்புரையாற்றினார். தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன “பல ஆண்டுகளாக போராடி பெற்ற தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு நான்கு தொகுப்புகளாக மாற்றியதால் தொழிலாளர்களின் அடிப்ப டை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து மே 20 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றன,” என்று வாசுகி தெரிவித்தார். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியையும் ஒன்றிய அரசு குறைத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். “100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை அதிகரிக்க வேண்டும், வேலை நாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும் என சிபிஎம் தவிர எந்த அரசியல் கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் “ஐக்கிய முற்போக்கு அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்தபோது, முக்கியமான மந்திரி சீட்டுக்களை கேட்க வில்லை. மாறாக, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, இஸ்லாமிய சமுதாய மக்கள் பின்தங்கிய நிலையில் இருந்து முன்னேற்றமடைய சச்சார் கமிட்டி அமைக்க வேண்டும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், கிராமப்புற மக்கள் முன்னேற்றமடைய 100 நாள் வேலைக்கான சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தோம்,” என்று வாசுகி விளக்கினார். கேரள அரசின் சிறந்த செயல்பாடுகள் “கேரள கம்யூனிஸ்ட் அரசு, மிகச் சிறப்பாக 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆறு மாதங் களுக்கு ஒருமுறை சமூக தணிக்கை செய்கிறது. அங்கு, தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர்கின்றனர். ஏனெனில் சர்வதேச அளவில் உள்ள பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் செயல்படு கின்றன” என்று அவர் குறிப்பிட்டார். “கடை களில் வேலை செய்யும் சிப்பந்திகள் உட்காரும் உரிமையை சட்டமாக கேரளா வழங்கியுள்ளது. அதைப் பின்பற்றி, தமிழ்நாட்டிலும் அச்சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது,” என்று அவர் சுட்டிக்காட்டினார். “மக்கள் மனங்களில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது” “கம்யூனிஸ்ட்டுகள் சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் போதுமான எண்ணிக்கையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், உழைப்பாளி மக்களின் மனங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது,” என்றார் வாசுகி. “சாதாரண மக்களுக்கு பிரச்சனை என்றால் போராட்டக் களத்தில் முன்னணியில் இருப்பது கம்யூனிஸ்ட்டுகள்தான். 100 நாள் வேலைக்கான கூலி கிடைக்கவில்லை, நீட் தேர்வு பல உயிர்களை பறிக்கிறது, தொழிற் சங்க உரிமை நசுக்கப்படுகிறது. இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக செங்கொடி இயக்கம்தான் போராட்டங்களை நடத்தி வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார். “தொழில் துறைகள் அழிகின்றன” கே.பாலகிருஷ்ணன் தனது உரையில், “தமிழகத்தில் இராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஞ்சாலைகள் அதிக மாக இருந்தன. இன்று அத்தொழில் ஐசியூவில் உள்ளது. பல பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாத்தூரில் நிப்புத் தொழில் அதிகமாக இருந்தது. உலகிற்கே நிப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்று நிப்பு பட்டறைகளே இல்லை,” என்றார். விவசாயிகளின் பிரச்சனைகள் “வெள்ளை ஈக்களின் தாக்குத லால் தென்னை விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். பருத்திக்கு விலை கிடைக்க வில்லை. எனவே, நேரடியாக அரசு கொள் முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் விளை நிலங்களுக்குள் மிருகங்கள் புகுந்து பயிர்களை அழித்து வருகின்றன,” என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஜவுளித்துறை நெருக்கடி “இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் துணிகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 36 சதவீதம் வரி போட்டுள்ளார். இதனால், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளித் தொழில் பின்னடைவை சந்தித்து வரு கிறது. வரி உயர்வை எதிர்த்து பிரதமர் மோடி பேசவில்லை,” என்று அவர் குற்றஞ்சாட்டினார். இந்திய மக்கள் மதிக்கப்படவில்லை “சீனா, கியூபா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் அரசுகள் அமெரிக்காவை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது. சட்டவிரோதமாக குடி யேறியவர்கள் என இந்திய மக்களை கைதி களைப் போல கை, கால்களில் விலங்கிட்டு விமானத்தில் கொண்டு வந்து விட்டனர். இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வில்லை. மாறாக, இச்செயலை விமர்சனம் செய்து கார்ட்டூன் வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையின் இணையதளத்தை முடக்கினர்,” என்று பாலகிருஷ்ணன் விமர்சித்தார். காஷ்மீர் தாக்குதல் விவகாரம் “காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது வெளிநாட்டில் இருந்த பிரதமர் உடனே இந்தியாவிற்குத் திரும்பினார். ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றுள்ளார். தேசம் முழுவதும் ஒன்றுபட்டு தீவிர வாதத்தை அழிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். வக்பு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் “ஆனால், பாஜக, ஆர்.எஸ்.எஸ் வெறுப்பு அரசியலை முன்வைக்கிறது. மக்களை திசை திருப்பும் வேலையைச் செய்து வருகிறது. நாட்டு மக்களில் இஸ்லாமி யர்கள் அந்நியர்களா? இந்நாட்டு குடிமக்கள்” என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். “பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்பு சொத்துக்களை கபளீகரம் செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். எனவே, நவீன பாசிச குணம் கொண்ட பாஜக அரசை வீழ்த்திட மதச்சார்பற்ற சக்திகளை இணைக்க வேண்டும். இந்தியாவில் பாஜக அரசை அகற்றுவதுதான் நமது முதல் கடமை,” என்று பாலகிருஷ்ணன் முடித்தார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.மாரியப்பன் முன்னிலை வகித் தார். நகரச் செயலாளர் எம்.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணனும் உரையாற்றி னார். எஸ்.முருகானந்தம் நன்றி கூறினார்.மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சுந்தர பாண்டியன், வி.முருகன், மூத்த தோழர் ஜி.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.இராமர், ஒன்றிய செயலாளர்கள் சந்தனக் குமார், முனியாண்டி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.