சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
கேரளாவில் நிரந்தர ‘பிறப்பிடச் சான்றிதழ் அட்டை” வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த அட்டை மூலம் கேரளாவில் பிறந்து, அங்கேயே வசிக்கிறோம் என்பதை எளிதாக நிரூபிக்க முடியும். தன்னிச்சையான எஸ்ஐஆர் அல்லது இதர வழிகள் மூலம் கேரள மக்கள் எவரும் புறக்கணிக்கப்பட முடியாது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டோலா சென்
வங்கதேசத்தில் நடக்கும் அட்டூழியங்களை பிரதமரின் அலுவலகமோ அல்லது ஒன்றிய அரசோ கண்டிக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இல்லை. இங்கும் (இந்தியாவில்) பாஜகவினரால் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகின்றனர். வங்கதேசத்தில் மக்களைத் துன்புறுத்துபவர்களைப் போலவே பாஜகவினரும் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பதால்தான், இந்தப் படுகொலைகளை கண்டிக்காமல் இருக்கிறார்களோ என்னவோ.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட்
ராஜஸ்தானில் பாலைவனம் விரிவடைவதைத் தடுத்து நிறுத்துவது ஆரவல்லி மலைத்தொடர் தான். இந்த மலைகள் மட்டும் இல்லையென்றால், பாலைவனம் தில்லி வரை பரவியிருக்கும். ஆனால் பாஜக ஆரவல்லி மலைத்தொடரை அழிக்க துடிக்கிறது.
ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா
பிரதமர் மோடி வரலாற்றிலிருந்து தனக்குத் தேவையானதை மட்டும் தேர்வு செய்து பேசுகிறார். முதலில் அவர் வரலாற்றைச் சரியாகப் படிக்க வேண்டும். சரியாக மட்டுமின்றி முழுவதையும் மோடி படிக்க வேண்டும்.
