tamilnadu

உத்தப்புரம் பட்டியலின மக்களின் அரசமர வழிபாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி

உத்தப்புரம் பட்டியலின மக்களின்  அரசமர வழிபாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி

தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

உத்தப்புரம் பட்டியல் சமூக மக்கள் அரச  மர வழிபாட்டுக்கு  உயர்நீதிமன்றம் அனுமதி  வழங்கியுள்ளதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்  னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு,மாநிலப் பொதுச்செயலாளர்  கே.  சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு: உத்தப்புரம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக  வழிபட்டு வந்த அரசமர வழிபாட்டு உரிமைக்கு, 1989  ஆம் ஆண்டு அக்கிராமத்தின் சாதி ஆதிக்க வாதிகள் ஏற்படுத்திய நிர்ப்பந்த ஒப்பந்தம்  தடை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பட்டியல் சமூக மக்களின் அரசமர வழி பாட்டு உரிமை கடந்த 34 ஆண்டுகளாக மறுக்  கப்பட்டு வந்தது.பட்டியலின மக்களின் அரச  மர வழிபாட்டு உரிமை கோரிக்கை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. எனவே அரச மரம் இருக்கிற முத்தாலம்மன் கோவி லும் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 9-4-2025 அன்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை , முத்தாலம் மன் கோயிலைத் திறக்க உத்தரவிட்டது. இதனையடுத்து 12-4-2025 அன்று உசி லம்பட்டி கோட்டாட்சியர் தலைமையில் சமா தானக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இரு  தரப்பினரையும் தனித்தனியாக அழைத்த கோட்டாட்சியர் சாதி இந்துக்கள்  திருவிழா வை நடத்துவார்கள். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். அரச மர வழிபாடு பற்றிக் கேட்டதற்கு அதற்கு பதில் அளிக்க வில்லை. இந்நிலையில் கிராமத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள் இருப்பதை நீதி மன்றம் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணை யில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் முயற்சியினால் உத்தப்புரம் பட்டி யல் சமூக மக்களும் தங்களையும் இணைந்துக் கொண்டனர். கோவில் திரு விழாவின் போது தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அதோடு தாங்கள் காலம் காலமாக வழிபட்டு வந்த அரச மர  வழிபாட்டு உரிமையையும் நிலை நாட்ட வேண்டும் என்று கோரினர். இம் மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் ஏப்ரல் 17 அன்று விசாரணை நடத்தி  அரச மர வழிபாட்டிற்கு எந்த தடையும் இல்லை; மேலும் கோவில் வளாகம் முழு வதும் அனைத்துத்தரப்பு மக்களும் சென்று  வழிபடலாம் என்று தெளிவுபடுத்தி உத்தர விட்டது. நீண்ட நெடுங்காலமாக அரசமர வழி பாட்டிற்காக உத்தப்புரம் பட்டியல் சமூக  மக்கள் போராடி வருகின்றனர். தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.களப் போராட்டங்களும்,சட்டப் போராட் டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் மிகச் சிறப்பான முறை யில் பங்களிப்பு செய்து பட்டியலின மக்க ளின் வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்க  சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் கள்  டி.லஜபதிராய், உ.நிர்மலாராணி, ராஜ் குமார், விக்னேஷ்வரன் ஆகியோருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  பாராட்டுதல்களைத் தெரிவிப்பதோடு, மிக  முக்கியமான  இந்த தீர்ப்பையும் வரவேற்கி றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.