tamilnadu

அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை

அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை

தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இந்தக் குழுவில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 அரசு ஊழியர் சங்கங்  களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளு டன் இன்று (பிப்ரவரி 24) தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பணியாற்றி வரும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர் களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி யில் பழைய ஓய்வூதிய  திட்டத்தை செயல்படுத்து வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான ஆணையம் 2016-இல் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு போராட்டங் களுக்கு பிறகு அந்த ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தும் இதுவரை  பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இதனிடையே, ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர் பாக ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது, அரசு ஊழியர்களை கொந்த ளிப்பில் ஆழ்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், பழைய ஓய்வூதி யத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு காலை தொடங்கியது. இதில் அரசு ஊழியர் சங்கத்துடன் 64  துறைவாரி சங்க ஊழியர் களும் கலந்து கொண்டனர்.

இந்தப் பின்னணி யிலேயே, பல்வேறு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கங் களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அவற்றின் மீது  உரிய முடிவுகளை காணும் பொருட்டு  அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை  அமைத்து தமிழக முத லமைச்சர் ஆணை யிட்டுள்ளார். அமைச் சர்கள் குழுவும் திங்கட்கிழ மையன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.