மதுரை:
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில், இதைஎதிர்கொள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகரித்து வரும் தொற்றுப்பரவலைக் கையாள மருத்துவமனையில் சுகாதார உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையர் ஜெ.சங்குமணி தெரிவித்தார்.
அரசு மருத்துவமனை, கொரோனா தடுப்பு சிகிச்சைப் பிரிவு, தோப்பூர் அரசுமருத்துவமனைகளில் 1,561 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தவிர மற்ற நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனையில் வழக்கம் போல் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகக் கூறிய மருத்துவமனை கண்காணிப்பாளர் எம்.பாலசுப்பிர மணியன், “தொற்றுப் பரவல் இன்னும்தீவிரமானால் அறுவைச் சிகிச்சைகளை ஒத்தி வைக்க வாய்ப்புள்ளது” என்றார்.அரசு மருத்துவமனை தவிர மதுரையில் 34 தனியார் மருத்துவமனைகள் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் உள்ளன.
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தனி வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளதாக கொரோனா பராமரிப்பு குழுஆலோசகர் ராமமூர்த்தி தெரிவித்துள் ளார்.இதற்கிடையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் அர்ஜூன் ஆகியோர் ஞாயிறன்று பார்வையிட்ட னர்.
கபசுரக் குடிநீர்
கொரோனா தடுப்புப் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னைஈடுபடுத்திக்கொண்டுள்ளது. மதுரை பெத்தானியாபுரத்தில் மொழிப்போர் தியாகி சீனிவாசன் ஏற்பாட்டில் கபசுரகுடிநீர் வழங்கும் பணி தொடங்கியது. மூத்தத் தோழர் பா. மாரிச்சாமி, பி.வீரமணி, கிளைச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் நாகஜோதி சிவா, நாகராஜ்உள்ளிட்ட பலர் பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்.