கொரோனா பாது காப்புப் பணியில் ஈடு பட்டுள்ள மருத்துவர்கள், செவிலி யர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கொரோனா போரில் முன்னணி வீரர்கள் என பிரதமர் மோடி, தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறிவருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநக ராட்சியில் தூய்மைப் பணியாளர் களை மாநகராட்சி நிர்வாகம் எப்படி பாதுகாக்கிறது. அவர்களுக்கு பாது காப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுகிறதா? வீரர்களுக்கு தேவையான அடிப்டை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றவா என் பது குறித்து மதுரை சிஐடியு மாநக ராட்சி தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் ம.பாலசுப்பிர மணியம் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு அறி விக்கப்பட்ட நிலையில் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஊர டங்கு அறிவிக்கப்பட்ட தினத்திலி ருந்து மதுரை மாநகராட்சி இது வரை இரண்டு முறை மட்டுமே முகக் கவசம் தூய்மைப் பணியாளர்களு க்கு வழங்கியுள்ளது அதிலும் 70 சத வீதம் பேருக்குத்தான் வழங்கப்பட் டுள்ளது. 30 சதவீதம் பேருக்கு இன் னும் வழங்கவில்லை. அரசு, மாநக ராட்சி நிர்வாகம் ஊழியர்களுக்கு போதுமான முகக்கவசங்கள், கை யுறை இதுவரை வழங்கவில்லை. ஊழியர்களின் எண்ணிக்கைக்கேற்ப கையுறையை மாநகராட்சி நிர்வா கம் கொள்முதல் செய்யவில்லை. ஒருமுறை பயன்படுத்தும் முககவ சம் மூன்று முதல் ஆறு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 68 நாட்களில் இரண்டு முறை மட்டுமே தூய்மைப் பணியாளர்களுக்கு மாந கராட்சி நிர்வாகம் முகக்கவசம் வழங்கியுள்ளது. மதுரையில் 5 ஆயி ரத்து 300 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத் திற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் முகக் கவசங்கள் தேவை. மாநகராட்சி நிர்வாகம் இந்த எண்ணிக்கையில் கொள்முதல் செய்து வைத்துள் ளதா? சென்னை உயர்நீதிமன்ற மது ரைக்கிளை தெருக்களில் குப்பை அள்ளும் தூய்மைப் பணியாளர் கள், குப்பைக் கிடங்குகளில் பணி யாற்றும் தூய்மைப் பணியாளர்கள் கையுறை, காலுறை அணிந்து வேலை பார்க்கவேண்டும்.
அவர் கள் அணிந்து பணியாற்றுவதை என் பதை சுகாதார மேற்பார்வையாளர் கள் தினசரி ஆய்வு செய்ய வேண் டும் எனக் கூறியுள்ளது. வரவேற் கத்தக்கது. பாதுகாப்பு உபகரணங் கள் அணியாமல் பணி செய்யும் பணி யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறுவதை பரி சீலிக்க வேண்டும். ஏனென்றால் அதி காரிகள் தொழிலாளர்களை தன் னிச்சை போக்கோடு பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுத்து விடும். பாதுகாப்பு உபகரணங்கள் பொறியியல், குடிநீர், பார்க் மஸ்துர், பம்பிங் ஸ்டேசன் பிரிவுகளில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு இது வரை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை.
பாதாளச் சாக்கடை பணியாளர்களுக்கு தரமான பாது காப்பு உபகாரணங்கள் இதுவரை வழங்கவில்லை. எனவே ஊழியர் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தினசரி பயன்படுத்தும் பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்குவதை தமிழக அர சும், மாநகராட்சியும் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். 50 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு என்பதை அனைத்து ஊழியர்களுக்கும் அரசு உறுதிப் படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா கால சிறப்பு ஊதியம் வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும், கொரோனா பணியின் போது பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்க ளுக்கு சிறப்பு நிவாரணமாக ரூ.50 லட்சம் மற்றும் அரசுப் பணி வழங்க வேண்டும்.