தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல்
சென்னை,ஏப்.9- தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) கூட்டுறவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படாதது குறித்து அதிமுக உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன்,“கூட்டு றவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப் பாட்டிலுள்ள 7,101 கூட்டுறவு சங்கங்க ளுக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2023 ஆம் ஆண்டில்முடிவடைந் தது. தற்போது, செயலாட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, தமிழ்நாட்டில் கூட்டு றவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப் பாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட சங்கங்களையும் சேர்த்து 7,696 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தால் ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்கு கள் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்தி உறுப்பினர் பட்டியலை முழுமையாக சரி செய்த பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகள் படி, அனைத்து கூட்டுறவு சங்கங்களின் உறுப்பனி பட்டியலில் இருந்து மரணமடைந்த மற்றும் தகுதியற்ற உறுப்பினர்களை நீக்குதல், ஆதார் மற்றும் குடும்ப அட்டை எண் சேர்க்கும் பணி போர்க்கால அடிப் படையில் நடைபெற்று வருகிறது. போலி உறுப்பினர்கள் நீக்கம் அதிமுக ஆட்சியில் 2.46 கோடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இருந்த நிலையில், போலியான உறுப்பினர்களை நீக்கியுள்ளோம். உறுப்பினர் பட்டியல் சீரமைக்கப் பட்ட பிறகு 1.20 கோடி நபர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பி னர்களாக உள்ளனர். இவர்களில் 79 லட்சத்து 36 ஆயிரத்து 282 உறுப்பி னர்களின் ஆதார் மற்றும் குடும்ப அட்டை எண் சேகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உறுப்பினர்களிடமும் விவரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடைபெறும்”என்றார். 1000 மகளிருக்கு மின்சார ஆட்டோ பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், அனைத்து வகைக் கூட்டுறவுச் சங்கங்கள் நடப்பிலுள்ள பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் உதவி வழங்கும்”என்றார். விவசாயிகள் இணையவழியில் பயிர் கடன் விண்ணப்பிக்கும் நடை முறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடனை நேரடியாக வழங்கும் நடைமுறையும் தருமபுரி மாவட்டத் தில் முன்னோடித் திட்டமாக செயல் படுத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நிலமற்ற ஏழை எளிய பெண் விவ சாயத் தொழிலாளர்கள் அவர்கள் பெயரில் இரண்டு ஏக்கர் வரை விவ சாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய 1000 மகளிருக்கு அவர் களின் பொருளாதார நிலையை மேம் படுத்த, மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கொள்முதல் செய்வதற்குக்கூட் டுறவு நிறுவனங்கள் வாயிலாக தலா ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப் படும் என்றும் தெரிவித்தார்.