tamilnadu

img

சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாடு தேனி மாவட்டத்தில் வரவேற்புக்குழு அமைப்பு ரூ.55 ஆயிரம் நிதி அளித்த தோழர்கள்

தேனி, பிப்.5 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மது ரையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு தேனியில் 103 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப் பட்டது. தேனியில் கட்சியின் மாவட்டக்குழு அலுவல கத்தில்  நடைபெற்ற வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இ.தர்மர் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உரையாற்றினார்.  கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்   எம்.ராமச்சந்தி ரன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  டி.வெங்க டேசன், ஜி.எம்.நாகராஜன், டி.கண்ணன், கே.எஸ்.ஆறுமுகம், சு.வெண்மணி மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். வரவேற்புக்குழு தேர்வு கூட்டத்தில் 103 பேர் கொண்ட வரவேற்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக பா.ராமமூர்த்தி, செயலாளராக எம்.ராமச்சந்திரன், பொருளாள ராக ஜி.எம்.நாகராஜன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். ஒரு மாதம் ஓய்வூதியம் அளித்த தலைவர்  கூட்டத்தில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பா.ராமமூர்த்தி, மாநாட்டு நிதியாக தனது ஒரு மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தார். பெரியகுளம் தாலுகாக்குழு உறுப்பினர் பி.இளங்கோவன், தனது மகன் திருமணத்தை முன்னிட்டு ரூ.10 ஆயிரம் வழங்குவதாக தெரிவித் தார்.  கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தங்களது பங்களிப்பாக மாநாட்டு நிதி வழங்கினர். மொத்தம் கூட்டத்தில் ரூ.55 ஆயிரம் நிதி திரண்டது.