மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடலுக்கு சீன மக்கள் குடியரசின் சார்பில் தூதர் சூ பெய்ஹாங் அஞ்சலி செலுத்தினார். பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சீத்தாராம் யெச்சூரியின் மனைவி சீமா சிஷ்டிக்கும் தமது இதயப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்தார்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி உடலுக்கு வியட்நாம் மக்கள் குடியரசின் சார்பில் தூதர் நிகுயென் தான் ஹை அஞ்சலி.
வாழ்நாள் முழுவதும் பாலஸ்தீன விடுதலைக்காக கர்ஜித்த தோழர் சீத்தாராம் யெச்சூரி உடலுக்கு பாலஸ்தீன தூதர் அட்னன் அபு அல்ஹைஜா அஞ்சலி
நேபாள குடியரசின் உதயத்திற்கு வழிகாட்டிய உற்ற தோழர் சீத்தாராம் யெச்சூரி உடலுக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) தலைவரும் முன்னாள் பிரதமருமான மாதவ் குமார் நேபாள் அஞ்சலி
என்றென்றும் வழிகாட்டியாய்த் திகழ்ந்த தங்கள் படைத் தலைவருக்கு சிபிஎம் கேரள மாநிலக்குழுவின் செவ்வணக்கம்.
தமது ஆரூயிர்த் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடலுக்கு, அவரது இல்லத்தில் செவ்வணக்கம் செலுத்திய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் ஆகியோர் அவரது மனைவி சீமா சிஷ்டிக்கு ஆறுதல்.
சிபிஎம் ஆந்திரப்பிரதேச மாநிலக்குழு செவ்வணக்கம்.
சிபிஎம் தெலுங்கானா மாநிலக்குழு செவ்வணக்கம்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் இறுதி மரியாதை.
என்றென்றும் மாணவர்களின் நாயகனுக்கு இந்திய மாணவர் சங்கம் பிரியாவிடை.