தோழர் ஆர். உமாநாத் 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி
உழைக்கும் வர்க்க நலனுக்காக அயராது உழைத்த தோழர் ஆர். உமாநாத் அவர்களின் 11-ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் பொன்மலை சங்கத்திடலில் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி மாலை அணிவித்து புகழஞ்சலி உரை நிகழ்த்தி, மரக்கன்று நட்டு வைத்தார். இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் நிர்மலா ராணி, ராஜ்குமார், கட்சியின் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ரேணுகா, கார்த்திகேயன், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மல்லிகா, ரஜினிகாந்த், டி.ஆர்.இ.யு கோட்டத் தலைவர் லெனின், துணைப் பொதுச் செயலாளர் சந்தானசெல்வம், உதவி கோட்டத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் செவ்வணக்கம் செலுத்தினர்.