tamilnadu

மதுரை மாவட்ட காவல்துறையின் அடக்குமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மதுரை, ஜூன் 2- மத்திய - மாநில அரசுகளுக்கு எதி ராக தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்களில் மதுரை மாவட்ட காவல்துறை கெடுபிடி செய்வதோடு அடக்கு முறையை கையாண்டு வரு கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சி.ராமகிருஷ் ணன் விடுத்துள்ள அறிக்கை: மத்திய-மாநில அரசுகள் எவ்வித முன் தயாரிப்புமின்றி நாடு முழுவதும் கொரானோ ஊரடங்கை மார்ச் 24-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.  பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள் ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்டு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

அரசுகள் அறி வித்துள்ள உதவிகள் யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற அள வில்தான் உள்ளது. கொரோனா நிவா ரணம் பெற அரசு அறிவித்துள்ள நிபந்த னைகளால் கட்டுமானம், ஆட்டோ, சாலையோர வியாபாரிகள், தையல் தொழிலாளர்கள், சுமைப்பணி தொழி லாளிகள் உட்பட லட்சக்கணக்கான முறை சாராத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் எதுவும் கிடைக்க வில்லை. தனியார் நிறுவன தொழிலா ளர்களுக்கு ஊதியம் கிடைப்பதே கேள்விக்குறியாகியுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி மத்திய அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை உயர்த்துவது, முதலாளி களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது, மின்சார சட்டம் 2020 உள்ளிட்ட மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு விரோதமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு அறி வித்துள்ள கொரோனா நிவாரண பொருளாதாரத் தொகுப்புகள் முத லாளிகளுக்கு உதவிடும் வகையில் உள்ளது.

சாமானியர்களுக்கு எவ் விதப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மத்திய தொழிற்சங்கங்கள், தொழி லாளர் நலன்களை கருத்தில் கொண்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொழிலா ளர் போராட்டங்களை நடத்த தொடங்கிய பின் முறைசாராத் தொழி லாளர்களில் சில பிரிவினருக்கு நிவா ரண உதவிகளை அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் சட்டம் கிராமப்புறங்களில் 100 சதவீதம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்டோ ரிக்க்ஷா இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்ட காவல்துறை வாழ்வாதாரத்திற்காக போராடும் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிடுகிறது.

ஊர டங்கு விதிகளுக்கு உட்பட்டு கோரி க்கை அட்டை ஏந்தி முழக்கமிட்டவர் கள் கைது செய்யப்பட்டு நாள் முழு வதும் கல்யாண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சில இடங்களில் கைது செய்து சிறை யில் அடைக்கப் போவதாக மிரட்டி யுள்ளனர். குறிப்பாக மே 14-ஆம் தேதி கள்ளந்திரி பகுதியில் சிஐடியு மாவட் டத் தலைவர் செ. கண்ணன் தலைமை யில் நான்கு தொழிலாளர்கள் கை களில் கோரிக்கை அட்டைகள் ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். காவல் துறையினர் அவர்களை கைது செய்து பின்னர் பிணையில் விடு வித்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே 21-ஆம் தேதி ஆட்டோ தொழிலாளர் போராட்டம் நடத்தப்போவதாக அறி வித்ததைத் தொடர்ந்து முதல் நாள் இரவே மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் காவல் துறையினரால் மிரட்டப்பட்டுள்ளனர், ஜூன் 1- ஆம் தேதி மின் ஊழியர்கள் இயக்கத்தை முடக்கும் வகையில் முதல்நாள் இரவு மின் ஊழியர்களிடம் தகவல் சேகரிக்கிறோம் என்ற பெய ரில் காவல்துறையினரால் அச்சுறுத்தப் பட்டுள்ளனர்.  கடந்த 70 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள் நியாய மான கோரிக்கைகளை அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்வதற்காக நடத்திய இயக்கங்களின் மீது அடக்கு முறைகளை ஏவி விடும் மதுரை மாவட்ட காவல்துறையினரின் செயல் கண்டிக்கத்தக்கது. காவல்துறை தொழிலாளர் விரோதப் போக்கை கை விட வேண்டும்.