வடகாட்டில் தேசிய பட்டியல் சமூகத்தினருக்கான ஆணைய இயக்குநர் ஆய்வு
புதுக்கோட்டை, மே 17- புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் சாதிய மோதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தேசிய பட்டியல் சமூகத்தினருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: வடகாடு கிராமத்தில், சாதிய மோதல் பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பாதிப்பிற்குள்ளாகிய மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறப்பட்டது. ஆய்வின் மூலம் பெறப்பட்ட ஆய்வு அறிக்கையினை விரைவாக அரசுக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, ஆணைய ஆய்வாளர் சுரேஷ், ஆணைய முதல் நிலை விசாரணை அதிகாரி லிஸ்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் தையல்நாயகி, இருக்கை மருத்துவ அலுவலர் ஆ. இந்திராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த.நந்தக்குமார், ஆலங்குடி வட்டாட்சியர் பி.வில்லியம் மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.