tamilnadu

img

கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்தில் நவீன பூங்கா விரைவில் திறப்பு

கோயம்பேடு   ரவுண்டானா   மேம்பாலத்தில்    நவீன  பூங்கா  விரைவில்   திறப்பு

சென்னை, மே 17 - கோயம்பேடு ரவுண் டானா மேம்பாலத்தின் கீழே அமைக்கப்பட்டு வரும் நவீன பசுமை பூங்கா விரை வில் மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட  உள்ளது. கோயம்பேட்டில் பூந்த மல்லி நெடுஞ்சாலை - ஜவ ஹர்லால் நேரு 100 அடி சாலை சந்திக்கும் ரவுண் டான பகுதியில் மேம்பாலம் உள்ளது. மூன்று வட்ட வடிவங்களை கொண்ட இந்த பாலத்தின் கீழே கட்டிட கழிவுகள் கொட்டப் பட்டு பாழடைந்து கிடந்தது. பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடந்தன. இவற்றை அகற்றி பாலத் தின் கீழ்ப்பகுதியை தூய்மைப்படுத்தி, வாகன ஒட்டிகள் தங்கள் பயணக் களைப்பை மறந்து பரவச மடையும் வகையில் மாற்ற பல்வேறு தரப்பினும் கோரி க்கை விடுத்தனர். இதனை யடுத்து சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அந்தப்பகுதியை எழிலார்ந்த வகையில் மாற்றும் பணியை மேற் கொண்டது. முதற்கட்டமாக, ஒரு வட்ட வடிவப்பகுதியில் 50 லட்சம் ரூபாய் செலவில், 40  ஆயிரம் சதுர அடி பரப் பில், செயற்கை நீரூற்று டன் கூடிய பூங்கா அமைக்க ப்பட்டது. குடிநீர் வாரிய பணி யால் அந்த பூங்கா சேத மடைந்தது. மேலும் பராம ரிப்பின்றி, பார்ப்போர் எரிச்ச லடையும் வகையில் கிடக் கிறது. அதேசமயம், மற்ற இரண்டு வட்டங்களில் சிஎம்டிஏ - பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து பிரம்மாண்ட பசுமை பூங்கா அமைக்கும் பணியை செய்து வருகிறது. 3.59 ஏக்கர் பரப்பளவில் 8.63 கோடி ரூபாய் செல வில் இந்த பூங்கா அமைக் கப்படுகிறது. மரங்கள், செடி கள் நடப்பட்டு, பூங்கா விற்கு வருவோர் உட்காரு வதற்கான இருக்கைகள், 50 பேர் வரை அமரும் வகை யிலான அரங்கம், யோகா மையம், உடற்பயிற்சி கூடம், நடைபாதை, குழந் தைகளுக்கான விளை யாட்டு இடம், ஸ்கேட்டிங் திடல், எட்டு வடிவ நடை பாதை, கடைகள், வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை, வண்ண விளக்குகள், குளம் போன்ற வசதி களுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பாலத்திற்கு வண்ணம் பூசும் பணி யும் முடிவடையும் நிலை யில் உள்ளது. அதேசமயம், ஏற்கெனவே அமைக்கப் பட்டு, பொலிவிழந்து உள்ள நீருற்றுடன் கூடிய பூங்கா வையும் சீரமைக்க வேண்டு மென்று மக்கள் எதிர் பார்க்கின்றனர்.