tamilnadu

img

சாம்சங் நிர்வாகத்தின் அடக்குமுறை சிஐடியு மாநிலக்குழு கடும் கண்டனம்

மதுராந்தகம், பிப். 5-  உரிமையை கேட்டு போராடும் தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை ஏவிவிடும் சாம்சங் நிறு வனத்துக்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மது ராந்தகத்தில் சிஐடியு மாநிலக்குழு கூட்டம் மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் தலைமையில் பிப். 4,5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தி யாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது: சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு எதிராக நிர்வாகம் மேற்கொண்ட அடக்கு முறையை கண்டித்து ஊழியர்களின் 38 நாள் வேலை நிறுத்தம் நடை பெற்றது. தொழிற்சங்கம் அமைப்பதை, நிர்வாகம் தடுத்த காரணத்தால் உயர் நீதிமன்றம் சென்று நீதிமன்றம் வழங்கிய கெடு வின் கடைசி நாளன்று சிஐடியு சங்கம் பதிவு செய்யப்பட்டது.  பதிவு செய்யப்பட்ட சிஐடியு சங்கத்தை பலவீனப்படுத்த, தொழி லாளர்களை வெளியேற்றி விரும்பு கின்ற நிர்வாகிகளை, சங்கத்தின் நிர்வாகிகளாக மாற்ற நிர்வாகத்தினர் முயற்சித்து வருகின்றனர். இதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தொழி லாளர்களை மனமாற்றம் செய்வது, நிர்வாகத்திற்கு பிடித்தவர்களை கொண்ட சங்கத்தில் கையொப்ப மிட்டால் பரிசுகள் வழங்குவது மற்றும் ரூ.3 லட்சம் வட்டி இல்லா கடன் தருவது, பதவி உயர்வு தருவது என ஆசை வார்த்தைகளை காட்டி தொழிலாளர்களை திரட்ட முயற்சித்து வருகின்றனர். ஆனால், இதனையும் மீறி தொழிலாளர்கள் சிஐடியு சங்கம் தான் வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். அதனால், தற்போது 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், 3 தொழி லாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். வேலை நீக்கம் செய்வோம் என்று மிரட்டியும் வரு கின்றனர். இது தொழிலாளர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட வன்மமாகும். சாம்சங் தொழிலாளர்கள் போராடி சங்கத்தை பதிவு செய்து விட்டார்கள் என்ற கோபமே இதற்கு காரணம். எனவே, அடக்குமுறையை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறார்கள். உயரதிகாரிகள் சந்திக்க வேண்டும் என  தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் வெகுண்ட தொழிலாளர்கள் உயர் அதிகாரியை சந்திக்க வேண்டும் என அமர்ந்துள்ளனர். இது எதிர்ப்பு போராட்டம் தான் வேலை நிறுத்தம் அல்ல என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நிர்வாகம் தற்போது தொழிலாளர் பயன்படுத்தும் கழி வறைகளை மூடி வைத்துள்ளது. உடனடியாக அரசு அலுவலர்கள் தலையிட்டு கழிவறைகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசு அலுவலர் கடுமையாக எச்சரித்த பின்னர், தற்போது கழிவறைகள் திறக்கப்பட்டுள்ளது.  அரசு தலையிட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் செயலை தடுத்து நிறுத்தி, தொழி லாளர்களுக்கான உரிமையை நிலை நிறுத்த வேண்டும். தொழிற் சாலையின் உயர் அதி காரிகளை தொழிலாளர்கள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், செவ்வாயன்று (பிப்.5) மாலை தொழிலாளர் நலத்துறை ஆணை யர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தென் கொரியாவைச் சேர்ந்த எஸ்எச் எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்  சாலையில் நிரந்தர பணியாளர்க ளாக உள்ள 93 பேரை வேலை நீக்கம் செய்திடுவோம் என நிர்வாகம் மிரட்டுகிறது. இது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடமும் முறையிட்டுள்ளோம். அதேபோல், அரசு சாம் சங் விவகாரத்திலும் தலை யிட்டு நிரந்த தீர்வு காண வேண்டும்.   ஒன்றிய பட்ஜெட்டில்  நிதி வெட்டு  கடந்த பல ஆண்டுகளாக வருமான வரி சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை தெரி விக்கப்பட்டு வந்தது. அதன்பேரி லேயே, தற்போது பட்ஜெட்டில் வருமான வரி சலுகை வழங்கப் பட்டுள்ளது. அதேபோல், வரிக்  கட்டக்கூடியவர்களுக்கு இச்சலுகை யில் பயன்பெறுவர். ஆனால், வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவருக்கு எந்த பயனுமில்லை. சத்துணவு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், வேலை வாய்ப்பில்லாத நபர்கள் விலைவாசி உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட உள்ளோம். அதை மறைப்பதற்காகவே வருமான வரிச்சலுகையை வழங்கியுள்ளனர்.   இவ்வாறு அ.சவுந்தரராசன் தெரி வித்தார்.  பேட்டியின் போது சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், உதவி பொதுச் செயலாளர்கள் திருச்செல்வன், எஸ்.கண்ணன், கே.ஆறுமுக நைனார், மாவட்டத் தலைவர் என்.பால்ராஜ், மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ், மாவட்ட பொரு ளாளர் எம்.கலைச்செல்வி மாவட்டத் துணைத் தலைவர் பி.மாசிலா மணி உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

இன்று பட்ஜெட் நகல் கிழித்தெறியும் போராட்டம்

பணவீக்கம் என்பது 10 விழுக்காடாக உள்ளது. நூறுநாள் வேலை வாய்ப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை.  ஏழைகள் மீதான இந்த தாக்குதலை கண்டித்து வியாழனன்று (பிப்.6) பட்ஜெட் நகலை கிழித்தெரியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். திருப்பரங்குன்றத்தில் முருகப்பெரு மான் மலையை வைத்து அரசியல் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. பெரியாரின் கொள்கை அறிவிப்புகள் குறித்து தவறாகவும் மற்றும் பாஜகவுக்கு ஆதரவாகவும் சீமான் பேசி வருகிறார். இதுபோன்ற நபர்களுக்கு மக்கள் சரியான பதிலடியை வழங்குவார்கள்.