tamilnadu

img

சர்வர் பழுதைக் காரணம் காட்டி மின்கட்டண வசூலை தனியாருக்குத் திருப்பும் அமைச்சர் தங்கமணி....

விருதுநகர்:
மின் கட்டண வசூலை தனியாருக்குத் தாரை வார்க்க மின்துறை அமைச்சர் தங்கமணி முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள கட்டணம் செலுத்தும் மையங்களில் அடிக்கடி சர்வர் பழுது ஏற்படுவதால் வாடிக்கையாளர்கள் தங்களது மின் கட்டணங்களை செலுத்த முடியாமல் நீண்ட நேரம்காத்திருக்கின்றனர். 

விருதுநகர் மாவட்டத்தில் மின்கட்டணம் செலுத்த ஒவ்வொரு ஊரிலும் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஆறு முதல் பத்து இடங்கள் உள்ளன. அங்கு கட்டணத்தை மக்கள் செலுத்தி வருகின்றனர். மின் கட்டணம்செலுத்தும் இடங்களில் இணையதள சேவைஒரே சீராகக் கிடைப்பதில்லை. இதனால் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.இதனால் கோபமும், வெறுப்பும் அடையும் மக்கள் தனியார் கணினி மையங்களுக்குச் சென்று  கூடுதலாக  பணம் செலவு செய்து மின்கட்டணத்தை செலுத்துகின்றனர். தமிழக அரசும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் திட்டமிட்டே மின்வாரிய அலுவலகங்களில் கட்டண வசூலை ஒழித்துக்கட்டி தனியாரிடம் தள்ளிவிடுவதாக மக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதே நேரத்தில் மின்வாரியத்தில் ஆட்களைக் குறைக்கவும் அமைச்சர் திட்டமிடுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மின்துறை அமைச்சர் தங்கமணி மின் கட்டண மையங்களில் சர்வர்கள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்யவேண்டும்.