tamilnadu

img

500க்கு 497 மதிப்பெண்களுடன் சிஇஓஏ பள்ளிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் மாநில அளவில் சாதனை

500க்கு 497 மதிப்பெண்களுடன் சிஇஓஏ பள்ளிகள்  10ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் மாநில அளவில் சாதனை

மதுரை, மே 16- தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டன.  இந்த தேர்வு முடிவில் மதுரை சிஇஓஏ (CEOA) பள்ளி மாணவர்கள் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் ஆர்.ஸ்ரீ ஹரினா 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும் மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் பெற்றார். அதே போல எம். இஷானி, ஜி.வி.சிவ மீனாட்சி தேவி மற்றும் ஜி.அபிஷேக் ஆகியோர் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தையும், பி.இன்பான்ட் லிபிகா மற்றும் ஆர்.திசியா ஆகிய மாணவர்கள் 493 மதிப்பெண்களுடன் பள்ளியில் மூன்றாவது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். 2 மாணவர்கள் 495 மதிப்பெண்களுக்கு  கூடுதலாகவும், 22 மாணவர்கள் 490 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 56 மாணவர்கள் 485 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 84 மாணவர்கள் 480 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 239 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும் எடுத்துள்ளனர்.  மேலும் அனைத்து பாடங்களிலும் 65 சென்டம் மதிப்பெண்களையும்  (100/100) பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களைப் பள்ளித் தலைவர் திரு. இராஜா கிளைமாக்சு பாராட்டினார். இந்த தொடர் சாதனை பற்றிக் கேட்டபோது,”பிளஸ் 2 பொதுத்தேர்வு மூலம் மாநில முதல் தர மதிப்பெண்ணான 200க்கு 200 என்ற இன்ஜினியரிங் கட்-ஆப் பெற்றும், 85 மாணவர்கள் 190க்கு மேல் இன்ஜினியரிங் கட்-ஆப் மற்றும் 93 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றும் சாதனைப் படைத்ததைத் தொடர்ந்து தற்போது 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிஇஓஏ மாணவர்கள் சாதனைப் புரிந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு சாதனைகளை முறியடிக்கும் வண்ணம் வரும் கல்வியாண்டிற்கு சிறப்புத்திட்டங்கள் தீட்டியுள்ளோம். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் தங்களது கல்லூரி மேற்படிப்புகளைத் தொடர சிஇஓஏ பள்ளிகள் பாலமாக அமைந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்” என இராஜா கிளைமாக்சு கூறினார். சாதனை மாணவர்களைப் பள்ளி இணைத் தலைவர்  இ.சாமி, துணைத் தலைவர்கள், தாளாளர்கள், பள்ளி முதல்வர்கள் கலா, மஞ்சுளா, கோடீஸ்வரி, மற்றும் ஆசிரியர்கள் அனைவரும்  பாராட்டினர்.