tamilnadu

கொரோனா பரவல் ஊடகங்களை தவிர்க்கும் மத்திய அரசு

மதுரை, மே 22- இந்தியாவில் கொரோனா தொற்றால் 1,12,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர. 3,435 பேர் உயிரிழந்தனர். தினம்தோறும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா தாக்கம் குறித்து தினம்தோறும் தவறாது அச்சு ஊடகம், காட்சி ஊடகங்களை சந்தித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கை, இறப்பு விகிதம், குணமடைந்தோர் விகிதத்தை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந் தது. தற்போது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அச்சு, காட்சி ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வரு கிறது. கடந்த எட்டு நாட்களாக செய்தி யாளர் சந்திப்பு நடைபெறவில்லை. சுகா தார அமைச்சகம் அச்சு, ஊடகவியலாளர் சந்திப்பை கடைசியாக மே 11-ஆம் தேதி நடத்தியது. அதற்குப்பின்னர் எந்த விளக் கத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.