ஜனவரி 31ஆம் தேதி பட்ஜெட் கூட் டத் தொடரின் கூட்டுக்குழு கூட்டத் தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரையை குறிப்பிட்டு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி,”குடியரசுத் தலைவரின் உரை மிகவும் சலிப்பாக இருந்தது. அவர் மிக வும் சோர்வாக இருந்தார். ஏழைப் பெண் ணான அவரால் பேச முடியவில்லை” என்று கூறியதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி அளித்த பேட்டியின் போது, ராகுல் காந்தியும், பிரியங்காவும் உடனிருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மீது பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொட ரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சுதிர் குமார் ஜா நீதிமன்றத்தில் அளித்த மனுவில், “குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவ மதித்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த பெண்ணான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து பேசியது, அவரை அவமதிக்கும் செயலாகும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட முசா பர்பூர் மாவட்ட நீதிபதி பாரதிய நியாய சன்ஹிதா சட்டவிதிகள் 352, 351 (2) (3) 79 கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தர விட்டுள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு பிப்ரவரி 10ஆம் தேதி விசாரிக்கப்படும் என முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றம் அறி வித்துள்ளது.