tamilnadu

img

கொடூரச் செயல்களுக்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவது தேசபக்த கடமை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு

காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேச பக்தன் என்று பேசியவரும், மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியவருமான பிரக்யா தாக்குர் இப்போதும் காவி உடை உடுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருகிறார். குஜராத் கலவரத்தில் கொடூரக் கொலைகளையும், பாலியல் வன்கொடுமையும் செய்த கும்பல் ஆரத்தி தட்டோடு வரவேற்கப்படுகிறார்கள்.

சென்னை, செப்.4-  கொடூரச் செயல்களுக்கு தயங்காத  ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவது தேச பக்த கடமை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரி வார அமைப்புகளுக்கும், அப்பாவி களை கொன்று அழித்த பல  பயங்கர வாத குண்டு வெடிப்புச் சம்பவங்களுக் கும் இடையிலான தொடர்பினை பற்றி - யஷ்வந்த் ஷிண்டே என்ற ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர் - நீதிமன்றத்தில் தெரி வித்துள்ள செய்திகள் பெரும் அபா யத்தை உணர்த்துவதாக உள்ளன. 2006 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா வில்  நான்டெட் என்ற மாவட்டத்தில் 2 பேர்  குண்டு தயாரிக்க முயன்று, அது வெடித்  ததால் இறந்து போனார்கள். இந்த சம்ப வம் ஒரு தனித்த குண்டு வெடிப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் அவு ரங்காபாத்தில் உள்ள ஒரு மசூதியை  தகர்க்க சதி செய்தது இப்போது பிர மாணப்பத்திரத்தில் வெளிப்பட்டுள் ளது. மேலும் அவர்கள் தொடர்ந்து பல  இடங்களில் குண்டு வெடிப்பை நடத்தி  மக்களை கொன்று குவிக்க துணிந்துள்  ளார்கள். இதற்காக வெடிகுண்டு தயா ரிப்பதற்கான பயிற்சியை ஆர்.எஸ்.எஸ்  அமைப்பின் மூத்த நிர்வாகிகள் ஏற்பாடு செய்தது; சில ராணுவ வீரர்களிடம் நவீன ஆயுத பயிற்சி பெற்றதாகவும் இந்த  வாக்குமூலம் வெளிக்கொண்டுவந்துள ளது.

து. இதனால் மாலேகாவ் குண்டு வெடிப்புகள், சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு பயங்கர வாத சம்பவங்களுக்கு இடையிலான  தொடர்புகளை வெளிப்படுத்தியிருக் கும் அவர் - பாஜகவின் தேர்தல் வெற்றி யை மனதில் கொண்டே இந்த கொடூரச் செயல்களை திட்டமிட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ்/வி.எச்.பி மற்றும் பாஜக தலைவர்களுக்கு இந்த திட்டங்களை பற்றி சொன்ன பிறகும் அவர்கள் இந்த  கொடூரச் செயல்களை தடுக்க எதையும்  செய்யவில்லை என்பதையும் குறிப் பிட்டுள்ளார். (இதில் பல சம்பவங்களில் போலி யாக பல முஸ்லிம் சிறுபான்மையினர் கைது செய்யப்பட்டு, பல ஆண்டு கள் துன்புறுத்தலுக்கு பின் குற்றமற்ற வர்கள் என்று நிரூபிக்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது) இப்போதும் ஆர்.எஸ்.எஸ்  அமைப்பின் சித்தாந்தத்தில் நம்பிக்கை  கொண்டிருக்கும் ஷிண்டே தெரி விக்கும் கருத்துக்கள் - அது ஒரு அபா யகரமான பயங்கரவாத அமைப்பு என்ப தையும், அதன் பரிவார அமைப்புகள், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கோடு எப்படிப்பட்ட கொடூரத்தையும் செய்யத் துணிவார்கள் என்பதையும் உணர்த்துகின்றன.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயங்கரவாத முகத்தை ஆளும் வர்க்க ஊடகங்க ளும் பேசுவதில்லை. தன்னுடைய கோர  முகத்தை அதிகாரத்தின் திரைச் சீலை யில் மறைத்துக் கொண்டு தொடர்ந்து செயல்படலாம் என்று தைரியமாக இருக்கிறார்கள்.  காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேச பக்தன் என்று பேசியவரும், மாலே காவ் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய வருமான பிரக்யா தாக்குர் இப்போ தும் காவி உடை உடுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருகிறார். குஜ ராத் கலவரத்தில் கொடூரக் கொலை களையும், பாலியல் வன்கொடுமையும் செய்த கும்பல் ஆரத்தி தட்டோடு வர வேற்கப்படுகிறார்கள். அந்த பயங்கரவாதப் படையின் தமி ழக  வாரிசாகவே அண்ணாமலையும் இன்ன பிற பரிவார அமைப்புகளும் கொடும் திட்டங்களோடு செயல்பட்டு வருகிறார்கள். வரவிருக்கும் அபாயத்தை முன் உணர்ந்து - ஆர்.எஸ்.எஸ்/பாஜக பயங்கரவாதிகளுக்கு எதிராக தேச பக்தர்கள் அனைவரும் திரள்வதோடு, இவர்களின் சதித் திட்டத்தை தடுத்து முறியடிக்க வேண்டும். இவ்வாறு அதில்  தெரிவித்துள் ளார்.