மதுரை, அக்.10- மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, பள்ளிகளுக்கு இ- மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டு வரு கிறது. அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மத்திய அரசு பள்ளி உள்ளிட்ட 4 பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபோல் 7 ஆம் தேதி மதுரை புறநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மறு நாளான 8 ஆம் தேதியும் நகர் பகுதி யில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதங்கள் தொடர்பாக, பள்ளி வளாகங்கள் முழு வதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தபோது, வெடி குண்டுகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும், மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்படும் முகவரியும் போலியானது என விசாரணையில் தெரியவந்தது. இத னைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பும் நபர்கள் குறித்து விசாரணை நடத்த தனிப் படையும் அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 3 பள்ளிகளுக்கு மிரட்டல் இந்த நிலையில், மாட்டுத்தாவணி, கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 3 தனியார் பள்ளிகளுக்கு இ- மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் பள்ளிகளுக்கு வந்த வெடி குண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்த னர். அதில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது வதந்தி என தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில் உள்ளது. மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங் களிலும் இதுபோல் மிரட்டல்கள் வரு கின்றன. இதனால், காவல்துறை யினருடன் இணைந்து பெற்றொரும் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனேவ, காவல்துறையினர் துரித மான நடவடிக்கை எடுத்து அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.