tamilnadu

கேரள உள்ளாட்சித் தேர்தல் போலி முடிவுகளை பகிர்ந்து பாஜக அடாவடி கேரளத்தில் டிச.9 செவ்வாயன்று 7

கேரள உள்ளாட்சித் தேர்தல் போலி முடிவுகளை பகிர்ந்து பாஜக அடாவடி கேரளத்தில் டிச.9 செவ்வாயன்று 7

மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது காவல் துறை முன்னாள் அதிகாரியும், பாஜக வேட்பாளருமான ஆர்.ஸ்ரீலேகா தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பான சட்ட விரோத நடவடிக்கையை மேற் கொண்டார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி முன்னிலையில் இருப்ப தாகக் கூறும் போலியான தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவை ஸ்ரீலேகா சமூக ஊட கங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார். தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது குறித்து புகார் எழுந்ததை அடுத்து, ஸ்ரீலேகா முகநூலில்   ‘வாக்குப்பதிவு முடி வுகளை’ திரும்பப் பெற்றார். விதிகளை மீறியதில் மாநில தேர்தல் ஆணையம் தலையிட்டதை அடுத்து இந்த நடவடிக் கையை மேற்கொண்டார். தேர்தல் ஆணையம் இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையிடம் புகாரளித்தது.