tamilnadu

img

கண்டுகொள்ளாத மோடி அரசு; கலங்கி நிற்கும் தொழில் துறை ரூ. 12 ஆயிரம் கோடி ஏற்றுமதி வாய்ப்பை இழந்து நிற்கும் திருப்பூர்!

கண்டுகொள்ளாத மோடி அரசு; கலங்கி நிற்கும் தொழில் துறை ரூ. 12 ஆயிரம் கோடி ஏற்றுமதி வாய்ப்பை இழந்து நிற்கும் திருப்பூர்!


திருப்பூர், டிச.9- வே.தூயவன் அமெரிக்க அரசின் 50 சதவிகித வரி விதிப்பினால் திருப்பூர் பின்னலாடைத் துறை ரூ. 12  ஆயிரம் கோடி அளவிலான ஏற்றுமதி வாய்ப்பை இழந்து நிற்கிறது. அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 50 சத விகிதம் அபராத வரி விதித்தார். இந்த அநியாய வரி விதிப்பு கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதற்குப் பிறகு மூன்றரை மாத காலத்தில் ரூ.12 ஆயிரம் கோடிக்கான அமெரிக்க ஆடை ஏற்றுமதி வாய்ப்பை திருப்பூர் ஏற்றுமதி தொழில் துறையினர் இழந்து நிற்கின்றனர். பல லட்சம் பேரின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி எனினும் ஒன்றிய மோடி அரசு இப்பிரச்சனையில் பல லட்சம் பேரின் வேலைவாய்ப்பு, கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணி ஆகிய வற்றைப் பற்றி அக்கறை காட்டாமல் அலட்சியமாக இருக்கிறது. திருப்பூர் தொழில் துறையைப் பொருத்தவரை ஏற்பட்டிருக்கும் நெருக்கடி குறித்து வெளிப்படையாக சொன்னால் ஒன்றிய அரசு பழிவாங்கிவிடும் என்ற அச்சத்தில் வாய் திறந்து பேசாமல் மனதில் புளுங்கிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  அமெரிக்காவை மீண்டும் வலிமை யுள்ள நாடாக மாற்றுவதாகக் கூறி அதனு டன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு முதலில் 25 சதவிகிதம் கூடுதல் வரி விதித்தார். அத்துடன் ரஷ்யாவிடம் எண் ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று மிரட்டி கூடுதலாக 25 சதவிகிதம் அபராத வரி விதிப்பதாக அறிவித்தார்.  ஏற்கெனவே அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் இந்திய பின்னலாடை களுக்கு சுமார் 16 சதவிகிதம் வரி விதிக்கப்படும் நிலையில் அபராத வரி யாக 50 சதவிகிதம் சேர்த்து மொத்தம் 65  சதவிகிதத்திற்கு மேல் வரி செலுத்த  வேண்டிய நிலையில், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பிரதான ஏற்றுமதி பொரு ட்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கம் 2025 ஆகஸ்ட் 27 அன்று இந்த வரி நடை முறை அமலுக்கு வந்தவுடனேயே திருப்பூர் ஏற்றுமதி தொழில்துறை பாதிப்பை சந்திக்கத் தொடங்கியது. ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டு அனுப்புவதற்கு தயார் நிலையில் இருந்த பின்னலாடைகள் ஏறத்தாழ 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அனுப்ப முடி யாமல் துறைமுகங்களிலும், குடோன் களிலும் முடங்கின. இது தவிர உற்பத்தி நிலையில் இருந்த ஆடைகளையும் என்ன செய்வது என்று தெரியாமல் ஏற்று மதியாளர்கள் குழம்பிப் போயிருந்தனர். இது தவிர புதிய வர்த்தக விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இந்த இக்கட்டான நிலையில் ஏற்கனவே உற்பத்தி செய்து தயார் நிலையில் இருந்த ஆடை களை அனுப்புவதற்கு வர்த்தகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அமெரிக்க வர்த்தகர்களும் கணிசமாக விலையைக் குறைத்து வழங்க வேண்டும் என வற்புறுத்தினர். இந்நிலையில் விலையை கணிசமாகக் குறைத்து லாபம் கிடைக்கா விட்டாலும் அல்லது ஓரளவு நஷ்டம் ஏற்பட்டாலும்  பரவாயில்லை, மொத்தமாக இழப்பைச் சந்திப்ப துடன் சிறிய அளவு இழப்பை ஏற்கலாம் என்று  முடிவு செய்து தயார் செய்த ஆடைகளை அனுப்பினர்.  உற்பத்தி நிலையில் இருந்த ஆடைகளும் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுடன் ஏற்றுமதி யாளர்கள் பல இழப்புகளை சந்தித்து அதையும் அனுப்பும் நிலை ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் அடியோடு பறிபோனது இது தவிர புதிய வர்த்தக விசாரணை எதுவும்  நடைபெறவில்லை. குறிப்பாக டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் வர்த்தகம் என்பது பெரியளவு நடை பெறும். ஆதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே இதற்கான வர்த்தக விசாரணை தொடங்கி விடும். சரியாக அதே கால கட்டத்தில்தான் டிரம்ப்பின் அபராத வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தது. எனவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆடை வர்த்தக வாய்ப்பு அடியோடு பறிபோனது. இந்த மூன்றரை மாத காலத்தில் திருப்பூருக்கு வழக்கமாக கிடைத்திருக்க வேண்டிய ஏறத்தாழ ரூ. 12 ஆயிரம் கோடி ஏற்றுமதி வாய்ப்பு மொத்த மாகப் பறிபோய்விட்டது என்று ஏற்றுமதி தொழில்  துறையினர் தெரிவித்தனர். எனினும் ஏற்றுமதி சார்ந்த தொழில் அமைப்புகளோ, அதன் நிர்வாகி களோ, தனிப்பட்ட ஏற்றுமதியாளர்களோ இந்த பாதிப்பைப் பற்றி வெளிப்படையாக பேசவோ, அறிக்கை அளிக்கவோ தயங்குகின்றனர். இதற்குக்  காரணம் மிகத்தெளிவானது. தற்போது இருக்கும்  நிலைமை குறித்து, அது உண்மையான நிலைமை யாக இருந்தாலும், ஏதேனும் எதிர்மறைக் கருத்தைத் தெரிவித்தால் அமலாக்கத்துறை சோதனை, வருமான வரித்துறை சோதனை அல்லது  வேறு பல வழிகளில் எங்களை அடையாளம் இல்லாமல் செய்து விடுவார்கள் என்று இந்த தொழில்  துறையினர் ஒன்றிய அரசின் மீது அச்சத்தில் உள்ளனர். தொழிற்துறையினரை மிரட்டும் பாஜகவினர் அதேசமயம் 50 சதவிகிதம் வரி விதிப்பு அமலுக்கு வந்தவுடனேயே செப்டம்பர் முதல் வாரத்தில் திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப்  பொதுச் செயலாளர் திருக்குமரன் பங்கேற்று ஏற்று மதியாளர்களுக்குத் தேவையான கோரிக்கையை  முன்வைத்தார். அதைத்தவிர வேறு எந்த அரசி யலும் பேசவில்லை. ஆனால் அதற்கே உள்ளூர்  பாஜகவினர் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்பு மிரட்டல் விடுத்து பிளக்ஸ் தட்டி வைத்த னர். அதற்குப் பிறகு சில நாட்களில் ஐகேஎப் பின்ன லாடை கண்காட்சி தொடர்பாக பேட்டியளித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் சிறப்புத் தலை வர் ஏ.சக்திவேல், அமெரிக்க வரி விதிப்பினால் பெரிய பாதிப்பு இல்லை. இதர பல வழிகளில் இந்த  பாதிப்பை சமாளித்துக் கொள்ளலாம் என்று கூறி னார். அப்பட்டமாக உண்மை நிலையை மறைத்து  பிரச்சனை இல்லாதது போல் பேசினார். ஒன்றிய அரசும் சில கடன் திட்டங்களை அறி வித்தது. இதன் மூலம் சில பெரிய ஏற்றுமதியா ளர்கள் கடன் பெற முடிந்தது. மேலும் ஏற்றுமதியா ளர்கள், இந்தியா அமெரிக்க வர்த்தகப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அதில் சுமூகத் தீர்வு காணப்படும், பிரச்சனை தீர்ந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால்  நிலைமை கையை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.  வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சம யத்தில் திருப்பூரில் பல ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்படுவதும், வேலை இழப்பும் அதிகளவு சந்திக்கக்கூடிய நெருக்கடி நிலை ஏற்படும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சத்தம் போட்டு அழக்கூட முடியாத நெருக்கடியில் தொழில்முனைவோர் கடந்த காலங்களில் நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் வெளிப்படை யாக கருத்துத் தெரிவித்ததுடன், தொழிற்சங்கங் களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்களை திருப்பூர் ஏற்றுமதி தொழில் துறையினர் நடத்திய வரலாறு உண்டு. ஆனால் இதுவரை சந்தித்ததிலேயே மிகப்பெரும் பிரச்ச னையாக இருக்கும் அமெரிக்க அரசின் 50 சதவிகித வரி விதிப்பினால் கடும் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், மௌன மாக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக் கின்றனர் என்று தொழில் துறையைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறினார். மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு திருப்பூர் தொழில் துறையினர் திருச்சி யில் மோடியை சந்தித்தபோது, 2020ஆம் ஆண்டு திருப்பூர் ஏற்றுமதி ரூ. 1 லட்சம் கோடியை எட்டு வதற்கு உரிய திட்டத்தைத் தாருங்கள், நான் அந்த திட்டத்தை நிறைவேற்றுகிறேன், என்று கூறி னார். இதைப் பற்றி ஏற்றுமதியாளர்கள் பலர்  புளகாங்கிதம் அடைந்து, இவரல்லவோ தலைவர்,  தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படக் கூடியவர் என்று கொண்டாடினர். திருப்பூரின் திண்டாட்டம் பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்கள் ஆனால் இப்போது தங்கள் பிரச்சனை குறித்துத் தெரிவிப்பதற்கு பிரதமரிடம் நேரம் கேட்கக்கூட தயங்கிக் கொண்டிருக்கின்றனர். திருப்பூரைச் சேர்ந்தவரை துணை குடியரசுத் தலை வராக ஆக்கியிருப்பதைப் பற்றிக் கொண்டாடி னர். ஆனால் திருப்பூர் திண்டாடி வருவதைப்  பற்றி ஒன்றிய ஆட்சியாளர்கள் கவலைப்பட வில்லையே? என்று சிலர் வேதனையுடன் கூறி னர்.  ஒன்றிய அரசு இந்தியாவின் பின்னலாடைத்  தலைநகரமாகத் திகழும் திருப்பூரைப் பாதுகாப்ப தற்கு, பல லட்சம் பேரின் வேலைவாய்ப்பைப் பாது காப்பதற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு இனியும் தாம திக்காமல், போர்க்கால அடிப்படையில் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழில் துறையினர் மட்டுமின்றி திருப்பூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.