திருப்பரங்குன்றம் மலை விவ காரத்தை பயன்படுத்தி, தமிழ கத்தில் திமுக-வின் ஆட்சிக்கு அபாயத்தை விளைவிக்கும் நோக்கில் பாஜக செயல்படு கிறது என இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரை யாற்றிய அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார். அதன்படி, “போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பி னர் என்று குறிப்பிட வேண்டாம். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜக-வினர் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்.
திமுக-வின் ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான போராட் டம் தேவையற்றது. திருப்பரங்குன்றம் மலையை பொறுத்த வரை, 1920 ஆம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன் பின்னர், 1930-ஆம் ஆண்டு லண்டன் கவுன்சில் ஒரு உத்தரவை வழங்கி யது. இதைத் தொடர்ந்து, 1958, 1975, 2004, 2017, 2021 என பல கட்டங்களில் பல்வேறு உத்தரவுகளை நீதி மன்றங்கள் வழங்கி இருக்கின்றன. தற்போது கூட இந்த விவகாரம் தொடர்பான இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக் கின்றன. கடந்த காலங்களில் எந்த அடிப்படையில் நீதிமன்றங்கள் உத்தரவுகளை வழங்கியதோ, அதன்படியே இந்த அரசு செயல் பட்டுள்ளது. ஆனால், இதைக் கொண்டு அரசியல் குளிர் காயலாம் என நினைக்கின்றனர். நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில்தான், தமிழக அரசு செயல் படும்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் என்ற முறை யில், முதலமைச்சர் அனுமதியுடன் விரைவில் அந்த மலைக்கு செல்ல இருக்கிறேன். அப்பகுதியில், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனை வரும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். தேர்தல் லாபத்திற் காக திருப்பரங்குன்றம் விவகா ரத்தை பாஜக கையாள்கிறது. பாஜக-வின் இந்த நடவடிக்கை யால் அவர்களது வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியம் இல்லை. போராட்டம் எனக் கூடியவர்கள் அனைவரும், ஒரு மதத்திற்கு எதிராகத்தான் முழக்கம் எழுப்பினர். பாஜக-வில் இருப்பவர்கள், மதத்தால் மக்களை வேறுபடுத்து கின்றனர். ஏற்கனவே என்ன வழி பாட்டு முறை இருக்கிறதோ, அதே முறை தொடரும் என அரசு கூறி வருகிறது” என தெரிவித்தார்.