இஸ்லாமியரை அழிக்கும் பாஜக!
சென்னை: “80 விழுக்காடு இந்துக்கள் வாழும் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 14,973 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கொல்லப்பட்டவர்களில் 37 விழுக்காட்டினர் இஸ்லாமி யர்கள். காயமடைந்தோரில் 40 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள். இது திட்டமிட்டு இஸ்லாமியரை அழித் தொழிக்க பாஜக அரசு மேற்கொள்ளும் கொலை வெறி யாட்டமாகவே பார்க்கப்படுகிறது. இந்த அவலம்தான் சனாதனம் கற்பிக்கும் தர்மமா?” என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பி யிருக்கிறார்.
எடப்பாடி புதிய விளக்கம்!
சென்னை: அதிமுக விடுக்கும் அழைப்பை சீமான், விஜய் கட்சிகளும் ஏற்காமல் புறக்கணித்த நிலையில், “திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்த இடத்திலும் நான் அழைப்பு விடுத்ததே கிடையாது. ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் வரலாம் என்று தான் கூறி னேன். தனிப்பட்ட முறையில் எந்த அழைப்பும் விட வில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘பல்டி’ அடித்துள்ளார்.
மறுபரிசீலனை செய்க!
சென்னை: தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதை தடுக்க, கச்சத்தீவு ஒப்பந் தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநிலங் களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலி யுறுத்தியுள்ளார்.
புதிதாக 4 தோழி விடுதிகள்!
சென்னை: தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்ற தோழி விடுதிகளை உதகை, திருப்பத்தூர், திருவாரூர், வீர சோழபுரம் பகுதிகளில் புதிதாக கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. ஏற்கெனவே, 12 இடங்களில் ரூ. 72 கோடி மதிப்பீட்டில் தோழி மகளிர் விடுதிகள் கட்டப்படும் என்று மகளிர் தினத்தில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்க தாகும்
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஜூலை 24 முதல் 26-ஆம் தேதி வரைக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 450 கோடி அபராதம் நிலுவை
சென்னை: சென்னையில் கடந்த 5 வருடமாக ரூ. 450 கோடி போக்குவரத்து அபராதங்கள் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை வசூலிப்பதற்கு 12 கால் சென்டர்கள் அமைத்துள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அபராத தொகையை முழுமையாக செலுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கி யுள்ளார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: போலியான குடும்ப அட்டை, அடை யாள அட்டை, ஆவணம் தயார் செய்து நிலத்தை அப கரித்ததாக கூறப்படும் விவகாரத்தில் தற்போது வரை அந்தச் சொத்து அரசின் பெயரிலேயே உள்ளது, என்றும்; எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் மா. சுப்பிர மணியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமைச்சர் சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
திருத்தம்
நேற்றைய (23.07.2025) தீக்கதிர் 5 ஆம் பக்கத்தில் வெளி யாகியுள்ள தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் பற்றிய குறிப்பு களில் ‘2009: மேன்மையான தருணம்’ என்ற தலைப்பில் வந்துள்ள வாக்கியங்களை, “கட்சியின் அரசியல் தலைமைக் குழு பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட போது, ‘எல்லோரை யும் விட கட்சியே மேலானது; கட்சி தாய் போன்றது’ என்று தோழர் வி.எஸ். குறிப்பிட்டார்” என வாசிக்க வேண்டுகிறோம். - ஆசிரியர்
கிருஷ்ணகிரியில் ரெங்க் நிறுவனத்தின் புதிய சேவை தொடக்கம்!
கிருஷ்ணகிரி: தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டு உள்ள ரெங்க் (RENK) நிறு வனத்தின் புதிய சேவை, ராணுவம் மற்றும் சிவில் துறைகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை உரு வாக்குவதன் மூலம் தனது பயணத்தைத் தொடர இருக்கிறது. இந்திய அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடையும் மாநி லங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. உல கின் முன்னணி நாடு களுடன் போட்டியிடும் அளவுக்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சி அமைந்து வரு கிறது. ஒரு டிரில் லியன் பொருளா தாரத்தை உருவாக்கவும், அதை சுற்றுச்சூழலுக்கு சிறந்த வளர்ச்சியாக அமைக்கவும், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறு வனமான “கைடன்ஸ்” வெளியிட்டுள்ள அறி விப்பில், ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான ரெங்க் குழுமம், கிருஷ்ண கிரி மாவட்டத்தின் சூளகிரி யில் தனது அதிநவீன உற்பத்தி சேவையை தொ டங்கி உள்ளதாக தெரி விக்க ப்பட்டுள்ளது. இந்திய ராணுவத் தின் அர்ஜூன் டேங்குக்கு தேவையான உதிரி பாகங் களை அளிப்பதில் இருந்து கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலுக்கு உத வும் வரை, இந்தியாவின் பாதுகாப்புப் பயணத் தில் ரெங்க் முக்கிய பங்க ளித்து வருகிறது. தமிழ் நாட்டில் தொடங்கப்பட் டுள்ள புதிய சேவை, ராணுவம் மற்றும் சிவில் துறைகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை உரு வாக்குவதன் மூலம் தனது பயணத்தை தொடர இருக்கிறது. இந்தியாவின் இரண்டு பாதுகாப்பு வழித்தடங் களில் ஒன்றான தமிழ் நாட்டை, துல்லியமான பொறியியல், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் உயர்தர உற்பத்திக்கான உலகளாவிய மைய மாக மாற்றும் வகையில் முன்னேறி வருவதாக வும் “கைடன்ஸ்” நிறு வனம் தெரிவித்துள்ளது.