ஏப்.6-மோடி திறந்து வைக்கிறார்
பாம்பன் புதிய பாலம்
சென்னை, மார்ச் 26- பாம்பன் கடலில் ரூ. 550 கோடி மதிப்பீட்டில் தூக் குப் பாலத்துடன் கட்டப் பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 அன்று திறந்து வைக்கிறார். சிறப்பு ரயில் மூலம் புதன்கிழமை இராமேஸ்வரம் வருகை தந்து கட்டுமானப் பணி களை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி கொடிய சைத்து தொடங்கி வைப்ப தற்காக 12 புதிய பெட்டி களைக் கொண்ட ரயில், புதிய பாலம் வழியே இராமேஸ்வ ரத்துக்கு கொண்டுவரப்பட் டுள்ளது.
அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்
புதுதில்லி, மார்ச் 26 - அந்தமான் நிக்கோபர் தீவுகள் கடல் பகுதியில் புத னன்று காலை மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. அந்த மான் கடல் பகுதியில் ஏற் பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்ட ரில் 4.4 அலகுகளாக பதி வாகி இருந்தது. அந்தமான் கடல் பகுதியில் திங்கட்கிழ மையன்றும் 4.9 ரிக்டர் அள வில் நிலநடுக்கம் உணரப் பட்டது குறிப்பிடத்தக்கது.