புதுக்கோட்டையில் செந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா
புதுக்கோட்டை, ஜூலை 5 - மதுரையில் நடைபெற்ற மார க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய செந்தொண்டர்களுக்கு புதுக் கோட்டையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட செந்தொண்டார் உபகுழு அமைப்பாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட செந்தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி உரை யாற்றினார். மாவட்டச் செயலளார் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கவிவர்மன், எஸ்.மதியழகன், டி.சலோமி, மாவட்டக்குழு உறுப்பின ர்கள் சி.அன்பு மணவாளன், அ.மண வாளன், பி.சுசிலா, எஸ்.பாண்டிச் செல்வி, எஸ்.கலைச்செல்வன், ஆ.குமாரவேல், எஸ்.பாண்டியன், ஆர்.வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.