அம்பேத்கர் பிறந்தநாள்: உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள்உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு “சமத்துவ நாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வெள்ளியன்று அலுவலர்கள் அனைவரும் ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.சிவராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.