தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. அது கூறியிருப்பதாவது: தோழர் சீத்தாராம் யெச்சூரி, உழைக் கும் மக்களின் தலைசிறந்த தலைவராவார். தோழர் சீத்தாராம் யெச்சூரி தன் அரசியல் வாழ்வு முழுவதும், ஏகாதிபத்தியம் மற்றும் நவீன காலனித்து வத்தின் கூர்மையான விமர்சகர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். “விவசாயப் பிரச்சனை”க்குத் தீர்வு காண்ப தற்காக அவர் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த காரணத்தால், அவரை விவசாயிகளும், விவசாய இயக்க மும் தங்களின் நெருக்கமான தலைவராகப் பார்த்தன. 1990களில் ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகள் நவீன தாராளமயக் கொள்கைகளைத் திணித்திட அறிவுஜீவிக ளுடன் கூடிக்குலாவியபோது, தோழர் சீத்தாராம் யெச்சூரி விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பிரி வினருடன் உறுதியுடன் நின்றார். அரசியல் பொருளாதா ரத்தில் ஓர் ஆழமான புரிதலை அவர் பெற்றிருந்ததால், நவீன தாராளமய சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு எந்த அளவிற்குப் பேரழிவினை ஏற்படுத்திடும் என்பதை அவர் ஆழமாகப் புரிந்துகொண்டிருந்தார். ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கையைத் தோலுரித்துக் காட்டும் விதத்தில் அவர் எழுதிய, “ஏன் இந்தப் பொருளாதாரக் கொள்கை?” என்னும் கட்டுரை விவசாயிகளை ஏகாதி பத்தியமும், ஏகபோகங்களும் எப்படியெல்லாம் வேட்டையா டும் என்பதை நன்கு உணரச் செய்தது.
தோழர் சீத்தாராம் யெச்சூரி, இந்துத்துவா பாசிஸ்ட்டுக ளுக்கும், உலக நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்திற்கும் இடையேயான உறவினைச் சரியானமுறையில் வெளிச் சத்திற்குக் கொண்டுவந்து, தொழிலாளி-விவசாயி கூட்டணி யால் மட்டுமே இந்துத்துவா சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்திட முடியும் என்று வலியுறுத்தினார். தோழர் சீத்தாராம் யெச்சூரி 2005இலிருந்து 2017 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதில் நிகரற்று விளங்கினார். தோழர் சீத்தாராம் யெச்சூரி, மோடி ஆட்சியானது விவசா யத்தைக் கார்ப்பரேட்மயமாக்க துடித்தபோது, அதற்கெதி ராக எதிர்க்கட்சிகளை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒன்றுபடுத்துவதில் முன்னணியில் நின்றார். ஓர் உண்மையான தேசபக்தர் என்ற முறையில், தோழர் சீத்தாராம் யெச்சூரி இந்திய விவசாயத்தை ஏகபோகங்க ளுக்குத் தாரை வார்த்திட ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளை கடுமையாக எதிர்த்துப் போராடினார். விவசா யத்துறையில் வளர்ந்துவரும் முரண்பாடுகளைக் கூர்மை யாக ஆய்வு செய்து, விவசாயத்தில் கொண்டுவரப்படும் அனைத்துவிதமான சுரண்டல்களுக்கு எதிராகவும் கார்ப்ப ரேட் எதிர்ப்பு விவசாயி இயக்கத்தைக் கட்டி எழுப்பினார். அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் எதிராகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதே நாம், ஏகாதிபத்திய எதிர்ப்பு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தோழர் சீத்தாராம் யெச்சூ ரிக்கு செலுத்தும் மிகவும் பொருத்தமான அஞ்சலியாகும். செவ்வணக்கம் தோழர் சீத்தாராம் யெச்சூரி! (ந.நி.)