tamilnadu

img

ஒரு சோசலிஸ்டின் அணுகுமுறை’ நூல் சுதன்வா தேஷ்பாண்டே வழங்கினார்

ஒரு சோசலிஸ்டின் அணுகுமுறை’  நூல்  சுதன்வா தேஷ்பாண்டே வழங்கினார்

தோழர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய ‘ஒரு சோசலிஸ்டின் அணுகுமுறை’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலை ‘லெப்ட் வேர்டு’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் இந்நூலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயனிடம், ‘லெப்ட் வேர்ட்’ பதிப்பகத்தின் ஆசிரியர் சுதன்வா தேஷ்பாண்டே வழங்கினார்.

பி.சம்பத் எழுதிய நூல்  பிருந்தா காரத் வெளியிட்டார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் எழுதிய ‘தி ஸ்ட்ரகிள்ஸ் அண்டு வெக்ட்ரிஸ் எகைன்ஸ்ட் கேஸ்ட் அப்ரசன் இன் தமிழ்நாடு’ (‘The Struggles & Victories - Against Caste Oppression in Tamil Nadu)’ நூலை பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ளது. இந்நூலை கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டு மேடையில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வெளியிட தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் பி. சுகந்தி பெற்றுக் கொண்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பினராயி விஜயன், பி.வி. ராகவலு, எம்.ஏ.பேபி ஆகியோர் உடன் உள்ளனர்.

அகில இந்திய மாநாடுகளின் தொகுப்பு நூல் வெளியீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7-ஆவது அகில இந்திய மாநாடு துவங்கி, 23-ஆவது அகில இந்திய மாநாடு வரையிலான நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பு நூலை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் வெள்ளிக்கிழமையன்று வெளியிட, மூத்த தலைவர் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை பெற்றுக் கொண்டார். பினராயி விஜயன், சுபாஷினி அலி, பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.