tamilnadu

img

தமிழ்நாட்டின் அனைத்து வனப்பிரிவுகளிலும் காட்டு யானைகளை அடையாளம் காணும் திட்டம்

தமிழ்நாட்டின் அனைத்து வனப்பிரிவுகளிலும் காட்டு யானைகளை அடையாளம் காணும் திட்டம்

கோயம்புத்தூர், மே 17- மனித - யானை மோத லைக் குறைப்பதற்காக மாநிலத்தின் அனைத்து வனப்பிரிவுகளிலும் யானை களுக்கான விவரக்குறிப்பை (புரோஃபைலிங் - காட்டு யானைகளை அடையாளம் காணும் முயற்சி) தமிழ் நாடு அரசாங்கம் விரைவில் விரிவுபடுத்த உள்ளதாக வும், இதற்காக வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழி யர்களுக்கு பயிற்சி வழங்கப் பட்டுள்ளதாகவும் செய்தி கள் வெளியாகியுள்ளன. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட யானை கள் கண்காணிப்பு பணிகள் நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டன. இந்த திட்டத்தை மீண்டும் செயல் படுத்தும் வகையில், வனத் துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினருக்கான பயிற்சித் திட்டம், ஓசை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வன அகாடமியில் புதன்கிழமை நடைபெற்றது.  இந்நிகழ்வில் முதன்மை தலைமை வனப்பாதுகாவல ரும், தமிழ்நாடு உயிரியல் பன்முகத்தன்மை பாது காப்பு இயக்குநருமான ஐ. அன்வர்தீன் கூறுகையில், “தமிழ்நாடு பல்லுயிர் பாது காப்பு மற்றும் காலநிலை மாற்ற பதிலளிப்புக்கான பசுமையாக்கும் திட்டத்தின் (TBGPCCR) கீழ் ஒரு பகுதி யாக நாங்கள் இந்த பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள் ளோம். யானைகளுக்கு இடையிலான உருவவியல் அம்சங்கள் மற்றும் நடத்தை பண்புகளைப் புரிந்து கொள்வதும், தனிப்பட்ட புலி களுக்குச் செய்யப்படும் பணியைப் போலவே தனித்தனி அடையாளங்க ளைப் பயன்படுத்தி அவற்றை அடையாளம் காண்பதும் எங்கள் முதன்மை நோக்கமாகும். மனிதன் - யானை மோதல் ஏற்படக்கூடிய 105 கிராமங்க ளை நாங்கள் கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்து வதன் மூலம், மனித-யானை மோதலை அறிவியல் ரீதி யாக குறைக்க முடியும். அதே போல வன எல்லைகளில் காட்டு விலங்குகளை விரட்டு வதற்கான விவசாயிக ளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை நாங்கள் உருவாக்கி வரு கிறோம்” என அவர் கூறினார்.