வைக்கம், செப்.9 - கேரளத்தின் மிகப்பெரிய வேம்பநாடு காயலில் (உப்பங்கழி) ஏழு கிலோமீட்டர் நீந்தி உலக சாதனை படைக்கத் தயாராகி வருகிறார் ஆறு வயது சிறுவன் ஷ்ரவன் எஸ். நாயர். ஆலப்புழா அம்பலகடவு வடக்கு கரையின் ஆழமான பகுதியில் வேம்பநாடு காயலில் இந்த சாதனை யைப் படைக்க உள்ளார். செப்.14 (சனிக்கிழமை) அன்று வைக்கம் கடற்கரை வரை ஷ்ரவன் நீந்துகிறார். இதன்மூலம், உலக சாதனை புத்த கத்தில் இடம் பெறுவதுதான் நோக்கம். முதன்முறையாக ஆறு வயது சிறுவன் ஏழு கிலோமீட்டர் நீந்தி சாதனை படைக்க உள்ளார். தற்போதைய சாதனை 4.5 கி.மீ ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் கோதமங்கலம் வாரப்பெட்டி ஊராட்சியின் கீழ் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட இலவச நீச்சல் பயிற்சிதான் ஷ்ரவனின் வாழ்க்கையில் திருப்புமுனை யாக அமைந்தது. அக்கா ஸ்ரேயாவுடன் நீச்சல் பார்க்க வந்த ஷ்ரவன், பயிற்சியாளர் பிஜு தங்கப்பனிடம் நீச்சல் கற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவரது பயிற்சியில் சிறந்த நீச்சல் வீரராக ஷ்ரவன் உருவாகி உள்ளார்.