tamilnadu

img

ஏ பொயட் - சே.மணிசேகரன்

ஏ பொயட்

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட  ஒரு கவிஞனின் கதைதான் ஏ பொயட் (‘A Poet’). இதுவொரு ஸ்பானிய Spanish மொழி திரைப்படம். சோக நகைச்சுவை வகை படமான இது 2025 மே மாதம் நடந்த  கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கெடுத்து பரிசையும் வென்றது. கவிஞர் கதாபாத்திரத்தில் நடித்த உபிமர்ரியாஸின் தோற்றம் ஓரளவிற்கு நமது நடிகர் நாகேஷின் தோற்றத்தை ஒத்தி ருக்கும். கதாபாத்திரத்திற்கேற்ற அருமை யான தேர்வு இந்த நடிகர். அவருக்கு வேலையில்லை; அதனால் சமூகத்தில் மதிப்புமில்லை. மனைவியும் பெண் பிள்ளையும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். பென்ஷன் வாங்கி பிழைப்பை ஓட்டும்  அம்மாவின் தயவில் வாழ்ந்து வரு கிறார் கவிஞர் ஆஸ்கர். தீரா குடிப்பழக்க மும் உண்டு. சில வேளைகளில் நடை பாதையிலேயே தூங்கியும் விடுவார். பெண்பிள்ளை மீது மிகுந்த பாசம் உடை யவர். மனைவியால் அவமானப்பட்டா லும் மகளைப் பார்ப்பதற்காகச் செல்வார்;  பேசுவார். செலவுக்கு மகளிடமிருந்து பண மும் வாங்கிக் கொள்வார். இரண்டு, மூன்று கவிதைத் தொகுதி களை வெளியிட்டும் தனக்கு சமூகத்தில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்கிற கவலை இவருக்கு எப்பொழுதுமே உண்டு. “அம்மா மட்டும் இல்லேன்னா இந்த  வீடு கூட உனக்கு கிடைச்சு இருக்காது” என்று சொல்லி அவமானப்படுத்துவாள் இவளுடைய சகோதரி. இருந்தாலும் அவளே இவருக்கு ஒரு பள்ளிக் கூடத்தில் கவிதை ஆசிரியர்  (Poetry teacher) வேலை வாங்கிக் கொடுக்கிறாள். வேலைக்கு செல்கிறார்.தனது வகுப்பில் உள்ள ஒரு மாணவியை தேர்ந்தெடுத்து கவிதையில் புலமை யாக்க முயற்சிக்கிறார்.அவளும் இவரு டைய முயற்சியின் மீது அக்கறை கொண்டு  கவிதை எழுதுவதில் முயற்சி எடுக்கி றாள். கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் வாங்குகிறாள். அத னால், பள்ளி நிர்வாகம் சந்தோஷம டைந்து பார்ட்டி ஒன்று வைக்கிறது. அந்த பார்ட்டியில் அந்த மாணவி மது பானத்தை அதிகமா அருந்தி நிலைகுலை கிறாள். வாந்தி எடுக்கிறாள். அவளை வீட்டில் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு இவருடையதாகிறது. சுயநினைவேயில்லாமல் இருக்கும் அவளை தனது காரில் ஏற்றிக்கொண்டு அவளுடைய வீடு நோக்கி செல்கிறார். வீட்டை அடைந்தவுடன் அவள் இருக்கும் நிலையைப் பார்த்து தன் மீது சந்தேகப்படுவார்கள் என நினைத்து அவளுடைய வீட்டின் படிக்கட்டின் மீது  போட்டு விட்டு செல்கிறார்.சத்தம் போட்டு வெளியே வரும் அவளுடைய வீட்டார் இவள் இருக்கும் நிலையையும் அவர் வேகமாக காரில் ஏறி செல்வதையும் பார்க்கின்றனர். சூழல், அவரை அயோக்கியனாக சித்தரிக்கிறது. அவளுடைய அண்ணன் அவரை நையப்புடைக்கிறான். பணத் தாசை பிடித்த அந்த பண்பாடற்ற குடும்பம்  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவ ரிடமிருந்து பணத்தை பிடுங்க நினைக்கி றது. பள்ளி நிர்வாகம் பணத்தைக் கொடுத்து அவர்களை சரிக்கட்ட நினைக்கிறது. இவரோ பணத்தைக் கொடுத்தால் தான் ஒரு குற்றவாளி என்பதை ஒத்துக் கொள்வது போல் ஆகிவிடும் என்று நினைக்கிறார். இதற்கிடையில் மகளும் தந்தையின் மீது சந்தேகம் கொள்கிறாள். வெறுக்கி றாள். தன்னால் அவருக்கு ஏற்பட்ட நிலை யை புரிந்து கொண்ட மாணவி கவிஞரின்  மகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பு கிறாள். அதைப் படித்த பின் தந்தையைப் பற்றி தவறாக நினைத் ததை நினைத்து வருந்துகிறாள். உடனே தந்தை எழுதிய புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்து படிக்க ஆரம்பிப்பதோடு படம் முடிகிறது. இந்தப் படத்தில் கவிஞராக நடித்த உபிமர் ரியாஸ்க்கு இதுதான் முதல் படம்  என்பதை நம்ப முடியலே.அந்த அளவிற்கு  கேரக்டரை புரிந்து கொண்டு மிகவும் இயல்  பாக நடித்துள்ளார்.  இணைத் தயாரிப்பு மற்றும் இயக்கம்  சிமோன் மெசா சோட்டோ. இவர், கொலம்பியா நாட்டு திரைக்  கதையாசிரியர் மற்றும் இயக்குநருமா வார். இவர் இயக்கிய லீடி அண்டு மட்ரே (Leidi and Madre) குறும்படங்களின் மூலம் பல சர்வதேச விருதுகளைப் பெற்  றுள்ளார். இவருடைய முதல் முழு நீளத் திரைப்படமான ஆம்பரோ (‘Amparo’)வும் 2021-ஆம் ஆண்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.