tamilnadu

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 957 பேருக்கு சாலை ஆய்வாளர் பணி! சிபிஎம் வரவேற்பு; முதல்வருக்கு நன்றி!

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 957 பேருக்கு சாலை ஆய்வாளர் பணி! சிபிஎம் வரவேற்பு;  முதல்வருக்கு நன்றி!

சென்னை, ஆக. 5 - டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 957 பேருக்கு, சாலை ஆய்வாளர் பணி நியமன ஆணைகள் வழங்கிய தமிழக அரசின் நடவடிக்கை யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக, கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் காலி யாக உள்ள சாலை  ஆய்வாளர் பணியிடங் களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (TNPSC) மூலம் தேர்வு  நடத்தப்பட்டு, கடந்த 27.11.2024 அன்று தேர்வு  முடிவுகள் வெளியிடப் பட்டன. இந்த முடிவில் 957  பேர் தேர்ச்சிப் பெற்றிருந் தனர். ஆனால், இந்த தேர்வு முடிவினை எதிர்த்து சிலர்  வழக்குத் தொடுத்த நிலை யில், அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தேர்ச்சி பெற்ற 957 பேருக்கு பணி ஆணை வழங்கிட வேண்டு மென தீர்ப்பளித்தது.  இத்தீர்ப்பு வெளியாகி 7 மாத காலமாகியும் சாலை ஆய்வாளர் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்தது; இதனால், தேர்வில் வெற்றிப்பெற்ற 957 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் மூலம் தேர்ந்தெடுக் கப்பட்ட 957 பேருக்கு சாலை ஆய்வாளர் பணி ஆணை வழங்கிட வேண்டுமென வலி யுறுத்தி கடந்த 06.07.2025 அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கட் கிழமை (04.08.2025) அன்று 957 பேருக்கு பணி ஆணை வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலையீட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் நன்றி யினையும், பாராட்டுக்களை யும் தெரிவித்துக் கொள் கிறோம். இவ்வாறு பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.