4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, மே 21- தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527 கோடியே 84 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடி யிருப்புகளையும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.207 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள 4 வணிக வளாகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் செவ்வாயன்று (மே 20) காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை வெளிவட்ட சாலையில் உள்ள மீஞ்சூர், வெள்ளனூர், வரதராஜபுரம், திருநா கேஸ்வரத்தில் ரூ. 11.46 கோடியில் 4 உடற்பயிற்சி பூங்காக்கள் மற்றும் ரூ. 3.20 கோடியில் தி. நகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ஆகிய வற்றை திறந்து வைத்து, ரூ. 255.60 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சுப் பணியில் தேர்வு செய்யப்பட்ட சார் நிலை பணியில் செயல் அலுவலர் (நிலை-4), பணியிடத்திற்கு 29 நபர்களுக்கும், தொகுதி-4 நிலை யிலான இளநிலை உதவியாளர் பணி யிடத்திற்கு 44 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு 24 நபர்களுக்கும் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணி யிடத்திற்கு 12 நபர்களுக்கும், என மொத்தம் 109 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாள மாக 16 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் ரூ. 42 கோடி செல வில், கட்டப்பட்டுள்ள மாணவியர் களுக்கான விடுதிக் கட்டிடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகம் ஆகிய வற்றில் ரூ. 120 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரத்தில் கட்டப்பட் டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகக்கட்டிடங்கள், பணிமனை கள், விடுதிக் கட்டிடங்கள் போன்ற பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ. 207 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்பட வுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்க ளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் கட்டப்பட வுள்ள கலையரங்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கள் சு.முத்துசாமி, தா.மோ.அன்பர சன்,பி.கே.சேகர்பாபு, கோவி.செழி யன், தலைமைச் செயலாளர் நா.முரு கானந்தம், மக்களவை, மாநிலங்க ளவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதி காரிகள் கலந்து கொண்டனர்.