tamilnadu

3,571 பேரை பலிவாங்கியது கொரோனா மதுரை பாதிப்பு  10 ஆயிரத்தை தாண்டியது

மதுரை, ஜூலை 27- தமிழகத்தில் கொரோனா தொற்று வேக மாக பரவி வருகிறது. பரவலில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. சென்னையில்  கொரோனா தொற்று பர வலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர் களின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் கூறிவந்தாலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.  கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வரு வது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. தமிழகத்தில் திங்களன்று  6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண் ணிக்கை 2,20,716-  ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் திங்களன்று மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,571 ஆக உள்ளது.  மதுரையில் திங்களன்று 249 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக் கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை பத்தா யிரத்தை தாண்டிவிட்டது. மொத்த உயிரி ழப்பு 216 ஆக உள்ளது. திங்களன்று ஆறு பேர் பலியாகியுள்ளனர். விழி பிதுங்கி நிற்கிறது விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் திங்களன்று 37 குழந்தைகள், டாஸ்மாக் ஊழியர்கள் பத்து பேர், ஒரு கிராம நிர்வாக அலுவலர் உட்பட 445 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  திங்களன்று  1 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 37 குழந்தைகள்  தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். நரிக்குடி கிராம நிர்வாக அலுவலர், விருதுநகரில் டாஸ்மாக் ஊழி யர்கள் பத்து பேரும் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 6,935 ஆக உயர்ந் துள்ளது.