tamilnadu

img

30% முகக் கவசம் அணிகின்றனர்....

சந்தைகளில் முப்பது சதவிகிதத்தினரே முகக்கவசம் அணிகின்றனர் என்றும், மக்களின் விழிப்புணர்வும் நிர்வாகத்தின் கண்காணிப்பும் அவசரத் தேவையாக உள்ளதுஎன்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். மதுரையின் முக்கிய பகுதிகளில் 8,963 பேரிடம் சு.வெங்கடேசன் தலைமையில் இளைஞர்கள் குழு நேரடியாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கொரோனா தொற்று பரவலின் ஊற்றுப்பகுதிகளாக, மக்கள் அதிகமாகக் கூடும் மையங்களே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக சந்தைப் பகுதி என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் முன்பே பரவலின் அதிதீவிர மையமாக மாறும் ஆபத்துநிறைந்ததாக உள்ளது.

கோயம்பேடு அனுபவம் தமிழகம் முழுவதற்கும் பெரும்பாடத்தினைக் கற்றுக்கொடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக் பகுதியிலிருந்து வெங்காயம் கொண்டுவந்த வாகனங்களும் அவற்றில் வந்தவர்களுமே கோயம்பேடு கொரோனா தொற்றின் ஊற்றுக்கண் என்பது பலரின் கருத்து.இந்நிலையில், கடந்த வாரம் சென்னையிலிருந்து மதுரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதையொட்டி, அங்கிருந்து வரும் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும் என்று ஜூன் 8ஆம் தேதி ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தினேன். அப்பொழுதே மதுரையில் இயங்கும் சந்தைகளைத் தீவிரமாகக்கவனிக்க வேண்டும். பல மாலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் தினசரி எண்ணற்ற வாகனங்களில் மனிதர்கள் சந் தைக்குப் பொருள்கொண்டு விற்கவும் வாங்கவும் வருகிறார்கள். அவர்களுள் யாருக்கேனும் தொற்று இருந்தால் அதுஒரே நாளில் பலமடங்காக பல பகுதிகளுக்கும் பரவும். எனவே, முகக்கவசங்கள்,கிருமிநாசினிகள் பயன்பாடு, சமூக இடைவெளி ஆகியவற்றை உறுதிப்படுத்துங்கள் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தினேன். ஓரிரு நாள்களில் நாங்கள் மதுரையில் இயங்கும் சந்தைகளை மையப்படுத்தி ஆய்வு மேற்கொள்கிறோம் என்றும் தெரிவித்தேன்.

அதன் அடிப்படையில் ஜூன் 9ஆம் தேதிஇரவு 11 மணி முதல் 10ஆம் தேதி அதிகாலை4 மணி வரை மதுரையில் இயங்கும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், மாட்டுத் தாவணி பழ மார்க்கெட், மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட், நான்குவழிச் சாலையிலுள்ள வண்டியூர் மார்க்கெட், பரவை மார்க்கெட், கீழமாசிவீதியில் இயங்கும் மொத்த வியாபாரப்பகுதி ஆகியவற்றில் முகக்கவசம் அணிந்து வருபவர்கள் பற்றியஆய்வினை மேற்கொண்டோம். 8963 பேரைஆய்வு செய்ததில் 2711 பேர் மட்டுமே முறையான முகக்கவசம் அணிந்தவர்களாக உள்ளனர். அதாவது 30% பேர் மட்டுமே முறையாக முகக்கவசம் அணிந்துள்ளனர். (மார்க்கெட் வாரியான விபரங்கள் இணைப்பில் கொடுத்துள்ளோம்)

சந்தையைக் காப்பாற்றுவது மொத்த சமூகத்தையும் காப்பாற்றுவதற்குச் சமம்.மதுரையில் இயங்கும் சந்தைகள் மதுரைக் கானவை மட்டுமல்ல, அருகிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கும் ஆனவை. எனவே பொதுமக்கள் சந்தைக்கு வரும்பொழுதும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் விழிப்புணர்வோடு செயல்படுங்கள் என்றும் அரசுநிர்வாகம் சந்தைகளைக் கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க வேண்டும் என்றும்கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றைச் சார்ந்த தோழர்கள் சுமார் 100 பேர் முழு இரவும் இந்த ஆய்வில் ஈடுபட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆய்வுக்கு ஒத்துழைத்த மாநகர் காவல்துறைக் கும் எனது நன்றி என்று அவர் கூறியுள் ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் நடத்திய முகக்கவசம் அணிவோர் குறித்த ஆய்வு

(9.6.2020 இரவு 11 மணி முதல் 10.6.2020 அதிகாலை 4.00 மணி வரை)

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்                      647
2. முகக்கவசம் அணியாதவர்கள்                   362
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்    570
                                                       மொத்தம்     1,579
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 40%

மாட்டுத்தாவணி பழம் மார்க்கெட் 
1. முகக்கவசம் அணிந்தவர்கள்                          330
2. முகக்கவசம் அணியாதவர்கள்                       197
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்        245
                                            மொத்தம்                       772
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 42%

மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்                     139
2. முகக்கவசம் அணியாதவர்கள்                   37
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்    49
                                                          மொத்தம்    225
முறையாக முககவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 62%

வண்டியூர் மார்க்கெட்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்                       95
2. முகக்கவசம் அணியாதவர்கள்                    32
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்     23
                                                           மொத்தம்    150
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 63%

பரவை மார்க்கெட்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்                          637
2. முகக்கவசம் அணியாதவர்கள்                    2,085
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்       815
                                                           மொத்தம்    2,537
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 25% 

கீழவாசல்- வாகன ஓட்டுனர், சுமைதூக்குவோர் 
1. முகக்கவசம் அணிந்தவர்கள்                         474
2. முகக்கவசம் அணியாதவர்கள்                   1,245
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்      222
                                                           மொத்தம்    1,941
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 24% 

யானைக்கல்- வாகன ஓட்டுனர், சுமைதூக்குவோர்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்                      389
2. முகக்கவசம் அணியாதவர்கள்                1,148
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்    222
                                                         மொத்தம்    1,759

முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 22%

* சந்தை ஆய்விற்கு உட்பட்டவர்கள் 8,963

* முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் எண்ணிக்கை 2,711

* முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் மொத்த சராசரி 30%