tamilnadu

img

தமிழகத்தில் 15 லட்சம்  தொழில் நிறுவனங்கள் மூடல்

மதுரை:
தமிழகத்தில் 15 லட்சம் தொழில் நிறுவனங்கள் திறக்கப்படவே  தொழில்வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் தெரிவித்துள்ளார். சுதந்திரதின கொடியேற்று நிகழ்வைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

கொரோனா நோய்த் தொற்று  நாட்டின் தொழில் வணிகத்துறைக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா தடுப்பு ஊரடங்குகள் காரணமாக நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டு ஏப்ரல்மாதம் முதல் ஜூன் மாதம் வரை 4.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இச்சரிவு மேலும்அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல பெரிய தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை கணிசமாக குறைத் துள்ளன. நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்  சுமார் 50 சதவீத உற்பத்தியையும், வருமானத்தையும் இழந்துள்ளன. சுமார் 35 சதவீத நிறுவனங்கள் ஊரடங்குக்குப் பிறகு திறக்கப் படவே இல்லை. இந்தியா முழுவதும் 6 கோடியே 30 லட்சம் சிறு-குறு நிறுவனங்கள் செயல்பட்ட நிலையில் ஊரடங்குக்குப் பின்பு 35 சதவீதம்திறக்கப்படவில்லை. தமிழகத்தில் சுமார் 40 லட்சம் பதிவுபெற்ற மற்றும் பதிவு பெறாத தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதில் சுமார் 15 லட்சம் தொழில் நிறுவனங்கள் தற்போது திறக்கப்படவே இல்லை. உற்பத்தி நிறுத்தம்மற்றும் உற்பத்திக் குறைவு காரணமாக பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். கொரனோ ஊரடங்கு காலம் முடிவதற்குள் தேசிய அளவில் அனைத்துத் துறைகளிலும் மொத்தம் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட வேலை இழப்புகள் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.