tamilnadu

14 ஆயிரம் பாலஸ்தீனக் குழந்தைகள் மடியும் ஆபத்து! நிவாரண உதவிகளை தடுத்துவரும் இஸ்ரேல்

14 ஆயிரம் பாலஸ்தீனக் குழந்தைகள் மடியும் ஆபத்து! நிவாரண உதவிகளை தடுத்துவரும் இஸ்ரேல்

ஐ.நா. கவலை

காசா, மே 21 - காசாவில் உள்ள பாலஸ்தீன குழந்தை களுக்கு போதிய நிவாரண உதவிகள் செய்யாவிட்டால் 48 மணி நேரத்திற்குள் சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. மனிதாபிமான உதவி களுக்கான தலைவர் டாம் பிளெட்சர் எச்சரித்துள்ளார்.  “காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இஸ்ரே லின் தாக்குதலால் ஏற்பட்ட படுகாயங்கள், உடல் உறுப்பு இழப்பு, தொற்று நோய் களுக்கு போதிய சிகிச்சை சுகாதாரம் இன்றி யும் தவித்து வருகின்றனர்.

போர் நிறுத்தத்தின் போதும் நிவாரண உதவிகள் தடுப்பு

இவ்வளவு மோசமான சூழலிலும் இஸ்ரேல் ராணுவம் ஐ.நா. அனுப்பி வைக்கும்  குறைந்த பட்ச நிவாரணப் பொருட்களைக் கூட காசாவிற்குள் அனுப்பாமல் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகிறது.  போர் துவங்குவதற்கு முன்பாக நாளொன்றுக்கு 500 லாரிகளில் ஐ.நா.  நிவாரண உதவிப்பொருட்கள் காசாவிற்குள் சென்று கொண்டிருந்தன. போர் துவங்கிய பிறகு அனைத்து நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி விட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போதும்,  ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அளவிற்கான  நிவாரண வாகனங்களை இஸ்ரேல் அனு மதிக்கவில்லை. கடந்த திங்கட்கிழமை வெறும் 5 நிவாரண வாகனங்களை மட்டுமே  இஸ்ரேல் காசாவிற்குள் செல்ல அனுமதித் தது. தற்போது 11 வாரங்களுக்குப் பிறகு நிலைமை மிக மோசமாக சென்றபிறகு வெறும் 100 நிவாரண வாகனங்கள் செல்ல அனுமதி கொடுத்துள்ளது இஸ்ரேல் ராணு வம். இது கடல் அளவுத் தேவைக்கு, சிறு துளி  உதவி” என பிளெட்சர் கடுமையாக விமர்சித் திருந்தார்.

உணவுப் பொருட்களை கொள்ளையடிக்கும் இஸ்ரேல்

அதுமட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களாகவே காசாவிற்குள் செல்லும் ஐ.நா. நிவாரண வாகனங்களில் உள்ள உணவுப் பொருட்களை, இஸ்ரேல் ராணுவம்  கொள்ளையடித்து வருகின்றது.    ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஏற்கெனவே பல குழந்தைகள் காசாவில் பலியாகி விட்டன. இந்நிலையில் பல நூறு குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்து குறை பாட்டின் காரணமாக மருத்துவ சிகிச்சை களில் உள்ளன. தற்போது உடனடி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் 14,000 அப்பாவி பாலஸ் தீன குழந்தைகள் மரணிக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ்  மற்றும் கனடா வெளியிட்டுள்ள கூட்டு  அறிக்கையில் ஐ.நா. நிவாரண உதவிகளை இஸ்ரேல் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியா தது என்று கண்டனம் தெரிவித்துள்ளன.

காசாவில் நடப்பது  உள்ளத்தை உருக்கும்  கொடுஞ்செயல்: பினராயி விஜயன் கண்டனம்

காசாவில் இருந்து வரும் செய்திகள் உள்ளத்தை உருக்குவதாக உள்ள நிலையில், இந்த கொடுமையைத் தடுத்து நிறுத்தவும், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரவும் மனிதகுலத்திற்கு தீங்கிழைக்காத அனைத்து மனிதர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். “தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வந்து பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க உலகம் ஒன்றுபட வேண்டும். இந்தக் கொடுமை தொடர அனுமதிக்கக் கூடாது. இஸ்ரேல் விதித்த முற்றுகையால் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் அவர்கள் அவதிப்படு கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்” என பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.