tamilnadu

img

தோழர் ஆர்.உமாநாத் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

தோழர் ஆர்.உமாநாத் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

புதுக்கோட்டை, மே 21 - இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முது பெரும் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலை மைக்குழு உறுப்பினருமான தோழர் ஆர்.உமாநாத் 11 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். தோழர்  உமாநாத் உருவப் படத்திற்கு மாலை அணி வித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி புகழஞ்சலி உரை யாற்றினார். நிகழ்ச்சியில், மாநிலக் குழு உறுப்பினர்  எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.கவிவர்மன், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சு.மதியழகன், துரை. நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபா லன், டி.சலோமி மற்றும் ஒன்றிய, நகரச்  செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி சிபிஎம் திருச்சி மாவட்டக் குழு அலுவல கமான வெண்மணி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஜெயசீலன், பகுதி  செயலாளர் ரபீக் அஹமது, அலுவலக செய லாளர்கள் சுபி, முரளி, தீக்கதிர் சார்பில் ஸ்டாலின் உள்ளிட்ட பலர், தோழர் உமாநாத்  உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.