மதுரை:
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது. குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுவதுதான் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. இதையடுத்து மதுரையில் நாள் தவறாமல் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 52. இதையடுத்து மொத்த எண்ணிக்கை 1,937 ஆக அதிகரித்துள்ளது.
திங்களன்று 7,176 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. மொத்த சாம்பிள்கள் சோதனை 94,781. நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்த மட்டில் 86,399 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 41 இடங்களில் தொற்று ஆய்வகங்கள் உள்ளன. வீட்டுக் கண்காணிப்பில் 29,797 பேர் உள்ளனர். அரசுக் கண்காணிப்பில் 36 பேர் மட்டுமே உள்ளனர். திங்களன்று 81 பேர் நலமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மொத்தம் 1,101 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 1,870 பேர் தனிமை வார்டுகளில் உள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
திங்கட்கிழமை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகபட்சமாக சென்னையில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரத்தில் ஒரு வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வயது முதல் 12 வயது வரையிலானவர்கள் 111 பேர். இதில் பெண்கள் 60 பேர். ஆண்கள் 51 பேர். 13 வயது முதல் 60 வரையில பாதிக்கப்பட்டவர்கள் 1,600 பேர். பெண்கள் 1,093 பேர். ஆண்கள் 507 பேர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 226 பேர். பெண்கள் 159 பேர். ஆண்கள் 67 பேர்.
மதுரையில் பாதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் மூன்று பேர் பெண்கள். ஒருவர் ஆண். பெண்கள் 27 வயது முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள்.12 வயது வரைக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி 111-ஐ தொட்டுவிட்டு. இது தான் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது.தமிழக அரசு ஞாயிறன்று அளித்துள்ள வரைபடத்தில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களே மிக மிக அதிகமாக உள்ளன.