tamilnadu

வாய்ப்பு வாசல்

காவல்துறையில் 1,352 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்

காவல் சார்பு ஆய்வாளர் கள் (Sub Inspectors - தாலுகா மற்றும் ஆயுதப்படை) பணிகளுக்கான நேரடித் தேர்வு 2025க்கு விண்ணப்ப தாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Online Application) தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வு வாரியம் வரவேற்கிறது. இந்தப் பணிக்கான ஊதிய விகிதம் ரூ. 38,900 - 1,16,600 ஆகும். இதற்கான அறிவிக்கையை ஏப்ரல் 4, 2025 அன்று வாரியம் வெளி யிட்டுள்ளது. விண்ணப்பங்களை இணைய வழி நிரப்புவதற்கான கால மும் ஏப்ரல் 7, 2025 அன்று துவங்கி விட்டது. மே 3, 2025க்குள் நிரப்பி அனுப்ப வேண்டும்.  ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய  இருபாலரும் இந்தப் பணியிட நிரப்பு தலுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1,299 (ஆண்கள் 909, பெண்கள் 390) பணியிடங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. இவற்றில் துறை ஒதுக்கீடு, வாரிசுதாரர்களுக்கான ஒதுக்கீடு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு ஆகியவையும் உள்ளன. மேலும் பற்றாக்குறைக் காலிப்பணியிடங்கள் என்ற வகையில் 53 பணியிடங்கள்(எஸ்.சி மற்றும் எஸ்.டி) கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இளங்கலைப்பட்டம் பெற்றிருத்தல் அவசியமாகும். குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சமாக 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயதில் தளர்ச்சி இருக்கும்.  தேர்வு முறை மற்றும் பாடத் திட்டங்கள் ஆகியவை இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற வாரியத்தின் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

ரயில்வேயில் 9,970 பணியிடங்கள்

அரசுத் துறை நிறு வனமான இந்தியன் ரயில்வேயில் Assistant Loco Pilot பணிக்கான காலியிடங்களை நிரப்பு கிறார்கள். 9 ஆயிரத்து 970 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளி யாகியுள்ளது. 16 மண்டலங்க ளுக்குமான காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் தரப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 30 வயதும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ரயில்வே விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்ச்சி இருக்கும். கல்வித்தகுதியைப் பொறுத்தவரையில் பத்தாம் வகுப்பு நிறைவு செய்து, அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு பிரிவில் ஐடிஐ சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ஆட்டோ மொபைல் ஆகிய பிரி வுகளில் ஏதாவதொன்றில் பட்டயம் அல்லது பட்டப் படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.  இணைய வழித்தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் என்ற வரிசையில் தேர்வு முறை இருக்கும். எழுத்துத் தேர்வு என்பது பத்தாம் வகுப்புத் தரத்தில் இருக்கும். கணிதம், மனத்திறன், பொது அறிவியல் மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து  வினாக்கள் எழுப்பப்படும். தமிழ் உள்பட 13 மொழிகளில் வினாத்தாள்கள் இருக்கும்.  இந்தப் பணி நிரப்புதல் குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைச் சொடுக்கித் தெரிந்து கொள்ளலாம்.  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : மே 9, 2025

விரைவில் குரூப் 4 அறிவிக்கை

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அட்ட வணைப்படி குரூப் 1க்கான அறிவிக்கை வெளியாகி, விண்ணப்ப நிரப்புதல் தற்போது நடந்து கொண்டி ருக்கிறது. இதே மாதத்தில் குரூப் 4க்கான அறிவிக்கையும் வெளியாகும் என்றும் அட்டவணையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. கடைசி வாரத்தில் இதற் கான அறிவிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு...

தெலுங்கானா மாநிலம் ஹைத ராபாத்தில் உள்ள வரு மானவரித்துறை அலுவல கத்தில் பணிபுரிய விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. 17 வகையான பிரிவுகளில் விளையாடியவர்களுக்கு வரி உதவியாளர் உள்ளிட்ட 56 பணி யிடங்கள் நிரப்பப்படுகின்றன. முழு விபரங்களுக்கு www.incometax hyderabad.gov.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.